சிறுதொழில் நிறுவனங்களின் பாக்கி பிரச்னைகளை தீர்க்க இணையதளம் ஜனாதிபதி முர்மு துவக்கி வைத்தார்.

ஜூன் 29, 2025 01:08 PM

     புதுடில்லி:சிறுதொழில் நிறுவனங்களுக்கு வரவேண்டிய தொகை தாமதமாவது தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதற்கான இணையதளத்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்துள்ளார்.

     உலக எம்.எஸ்.எம்.இ., தினத்தை முன்னிட்டு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

      இந்த இணையதளம், சிறுதொழில்களின் நிலுவை தாமதமாவது குறித்த தாவாக்களில் விசாரணை மற்றும் முடிவெடுப்பதில் உதவியாக இருக்கும். நிதி, பெருநிறுவனங்களுடன் போட்டி, தாமதமான வரவு ஆகியவை சிறுதொழில்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள்.

       அரசின் ஊக்கத் திட்டங்களை பயன்படுத்தி, இளம்பெண்கள் சிறுதொழில் துவங்கி, சுயசார்பை நிலைநாட்ட வேண்டும். நவீன தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் நிறைந்த இன்றைய சூழலில், பசுமை தொழில்நுட்பத்தை சிறுதொழில்கள் மேம்படுத்த வேண்டும்.

      பசுமை தொழில்நுட்பம் தான், சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நீடித்த நிலைத்தன்மையையும், போட்டித்தன்மையையும் உறுதிசெய்து, நாட்டின் இலக்குகளை அடையச் செய்யும்.

    சிறுதொழில் துறையின் மேம்பாட்டுக்கு, புதுமை கண்டுபிடிப்புகள் மிக அவசியம். புத்தொழில்களையும், புதுமை கண்டுபிடிப்புகளையும் அரசு ஊக்குவித்து வரும் நிலையில், அதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

President Murmu Launches Website to Resolve MSME Payment Issues

June 29, 2025, 01:08 PM

     New Delhi: President Droupadi Murmu has launched a new website aimed at resolving issues related to delayed payments owed to Micro, Small, and Medium Enterprises (MSMEs).

      Speaking at an event in Delhi on the occasion of World MSME Day, the President stated:

      This website will assist in tracking and resolving delayed dues for small businesses. Key challenges faced by MSMEs include funding issues, competition with large companies, and delayed payments.

      She emphasized that young women should utilize government support schemes to start small businesses and become self-reliant. In today’s world of advanced technology and climate change, MSMEs should adopt and develop green technologies.

      Green technology, she noted, will ensure the long-term sustainability and competitiveness of MSMEs, helping the nation achieve its broader development goals.

      Innovation is vital for the growth of the MSME sector. The government is encouraging both startups and innovations, and youth should take full advantage of these opportunities.

      This was the key message shared by President Murmu during her address.

ரூ.86 கோடி திரட்டிய ‘பேப்ஹெட்ஸ்’

ஜூன் 28, 2025 12:57 PM

      சென்னை:சென்னையை சேர்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனமான பேப்ஹெட்ஸ், ‘டீப் டெக்’ துறையில் ஈடுபட்டு வருகிறது.

       இந்நிறுவனம் வான்வழி, மின்சார வாகனம், கப்பல் போன்ற துறைகளுக்கு தேவையான உதிரிபாகங்களை, ‘3டி பிரின்டிங்’ மற்றும், ‘ஆட்டோமேட்டட் காம்போசிட்’ தொழிநுட்பம் வாயிலாக நுணுக்கமான முறையில் குறைந்த எடையில் மிக வலிமையுடன் தயாரிக்கிறது.

     இந்நிறுவனம், ஆக்செல் இந்தியா உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 86 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

‘BabhHeads’ Raises ₹86 Crore

June 28, 2025, 12:57 PM

      Chennai: Chennai-based startup BabHeads operates in the deep tech sector. The company manufactures lightweight yet highly durable components for industries such as aerospace, electric vehicles, and marine using advanced technologies like 3D printing and automated composite manufacturing.

      The startup has raised ₹86 crore in funding from investors, including Accel India.

60 தொழிற்பேட்டையில் 1,520 மனைகள் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்

ஜூன் 27, 2025 01:32 PM

      சென்னைசேலம் வெள்ளி கொலுசு தொழிலுக்கான அடுக்குமாடி தொழிற்கூடத்தை உள்ளடக்கிய, மொத்தம் 60 தொழிற்பேட்டைகளில் உள்ள, 1,520 மனைகளை சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு ஒதுக்கும் பணியில், ‘சிட்கோ’ ஈடுபட்டுள்ளது.

      சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, 102 தொழில் அலகுகளுடன் கூடிய அடுக்குமாடி தொழிற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.

     மேலும், காஞ்சிபுரம் வையாவூர், திருவள்ளூர் காவேரிராஜபுரம், துாத்துக்குடி லிங்கம்பட்டி, திருவாரூர் வண்டாம்பாளையில் புதிய தொழிற்பேட்டைகளை சிட்கோ அமைத்து உள்ளது.

     இந்த புதிய தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகள் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டைகளில் இருக்கும் காலி மனைகள் என, மொத்தம், 60 தொழிற்பேட்டைகளில் உள்ள, 1,520 மனைகளை தற்போது தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யும் பணியில், சிட்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

     இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மனையைப் பெற விண்ணப்பிக்கும் விபரங்களை, சிட்கோவின், ‘www.tansidco.tn.gov.in’ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்பவரிடம் நேர்காணல் நடத்தி, மனைகள் ஒதுக்கப்படும்.

1,520 Industrial Plots Available for Entrepreneurs in 60 Industrial Estates

June 27, 2025, 01:32 PM

      Chennai: SIDCO (Small Industries Development Corporation) has initiated the allocation process for 1,520 plots located across 60 industrial estates, aimed at benefiting small, micro, and medium-scale entrepreneurs. This includes a multi-storey industrial complex in Salem specifically designed for the silver anklet industry.

      To support silver anklet manufacturing units in Salem, a multi-storey industrial building with 102 units has been established.

     Additionally, SIDCO has set up new industrial estates in Vaiyavur (Kanchipuram), Kaverirajapuram (Tiruvallur), Lingampatti (Thoothukudi), and Vandampalayam (Tiruvarur).

      The plots available in these new estates, along with vacant plots in existing estates, total 1,520 across 60 locations. SIDCO is currently in the process of allocating these plots to eligible entrepreneurs.

      A senior official from the Department of Micro, Small, and Medium Enterprises stated: Details regarding plot application can be found on SIDCO’s official website, www.tansidco.tn.gov.in. Applicants will be interviewed before plots are allotted.

உச்சத்தில் ஹூண்டாய்

 ஜூன் 26, 2025 12:43 PM

      வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா பங்குகள், நேற்றைய வர்த்தகத்தின் போது 2.4 சதவீதம் அதிகரித்து, புதிய உச்சமாக பங்கு ஒன்று 2,049 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. கடந்தாண்டு அக்., 22ல் பங்குச்சந்தையில் ஹூண்டாய் மோட்டார் பங்கு ஒன்று 1,960 ரூபாய்க்கு பட்டியலானது.

      நடப்பு மாதத்தில் மட்டும் 11 சதவீதம் இந்நிறுவன பங்கு விலை உயர்ந்துள்ளது. சந்தையில் திடீரென பங்குகள் உயர்வுக்கான காரணம் தெரியவில்லை. எனினும், நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில் கார்கள் விற்பனை சவாலை எதிர்கொண்டு வருகின்ற போதிலும், ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hyundai Hits New High

June 26, 2025 – 12:43 PM

     Shares of automobile manufacturer Hyundai Motor India rose by 2.4% during yesterday’s trading, reaching a new all-time high of ₹2,049 per share. Previously, on October 22 of last year, Hyundai Motor was listed on the stock exchange at ₹1,960 per share.

      In the current month alone, the company’s stock price has increased by 11%. While the reason for the sudden surge in stock price is unclear, it is noteworthy that despite facing challenges in domestic car sales during the current financial year, the company’s exports have significantly increased.

உலக வர்த்தக மன்ற பட்டியலில் மெட்ராஸ் ஐ.ஐ.டி., ஸ்டார்ட்அப்கள்

 ஜூன் 25, 2025 12:34 PM

      உலக வர்த்தக மன்றத்தின் 2025ம் ஆண்டுக்கான தொழில்நுட்ப முன்னோடிகள் அறிக்கையில், 10 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்று நிறுவனங்கள் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் துவங்கப்பட்டவை. 28 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் இயங்கி வரும் 100 ஆரம்பகட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்டு, இந்த தொழில்நுட்ப முன்னோடிகள் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

        இதில் நம் நாட்டைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அக்னிகுல் காஸ்மோஸ், கேலக்ஸ்ஐ, இ – ப்ளேன் ஆகிய மூன்று ஸ்டார்ட் அப்களும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் துவங்கப்பட்ட விண்வெளி துறை சார்ந்த நிறுவனங்கள்.

Madras IIT Startups Featured in World Economic Forum List

June 25, 2025 – 12:34 PM

       In the World Economic Forum’s 2025 report on Technology Pioneers, 10 Indian startup companies have been featured. Among them, three companies were founded at IIT Madras.

       This Technology Pioneers report includes 100 early-stage startup companies operating across various sectors from 28 countries.

      Among them, 10 companies are from India. Three of these — Agnikul Cosmos, GalaxEye, and ePlane — are space-sector startups founded at IIT Madras.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் ரூ.585 கோடிக்கு ஆர்டர்

ஜூன் 23, 2025 12:36 PM

       பெங்களூரு:பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்த மாதம் 585 கோடி ரூபாய்க்கு ஆர்டர் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. நெருப்பு கட்டுப்பாட்டு அமைப்பு, தொலைத்தொடர்பு அமைப்பு, ஜாமர்கள், இதர உதிரிபாகங்கள், சேவைகள் உள்ளிட்டவற்றுக்கான ஆர்டர்கள் இது.

       நடப்பாண்டில் இதுவரை 3,445 கோடி ரூபாய்க்கும்; கடந்த நிதியாண்டில் 18,715 கோடி ரூபாய்க்கும் ஆர்டர் பெற்றுள்ளது. ராணுவம் அல்லாதவற்றுக்கான உற்பத்திகளை அதிகப்படுத்தி, இந்நிறுவனம் வணிகத்தை பெருக்கி வருகிறது.

       இணைய பாதுகாப்பு தீர்வுகள், மென்பொருள், ரயில் மற்றும் மெட்ரோ தீர்வுகள், விண்வெளி எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல அமைப்புகளையும் உற்பத்தி செய்து வருகிறது.

Bharat Electronics Receives Orders Worth ₹585 Crore

June 23, 2025 –12;36 PM

      Bengaluru: Bharat Electronics Limited (BEL) has announced that it received orders worth ₹585 crore this month. These orders include fire control systems, communication systems, jammers, various spare parts, and related services.

      So far this financial year, the company has received orders totaling ₹3,445 crore. In the previous financial year, it had secured orders worth ₹18,715 crore. BEL is expanding its business by increasing production for non-defence sectors.

      The company also manufactures cybersecurity solutions, software, rail and metro solutions, and space electronics, among other systems.

கூடுதல் கன்டெய்னர் முனையம் சென்னை துறைமுகம் திட்டம் கன்டெய்னர்கள் எண்ணிக்கை 20சதவிகிதம் உயர்வு

ஜூன் 22, 2025 12:46 PM

      சென்னை:சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதால், கூடுதல் கன்டெய்னர் முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

      இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:

      சென்னை துறைமுகத்தை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்கு மதியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக, துறைமுகத்தின் கட்டமைப்பு மேம்பாட்டு பணி, கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, ரயில் மற்றும் சாலை போக்குவரத்துடனான இணைப்பு உள்ளிட்ட பணிகளை, படிப்படி யாக மேற்கொண்டு வருகிறோம்.

      கடந்த சில ஆண்டுகளாக, 10 முதல் 15 சதவீதம் என அதிகரித்து வந்த கன்டெய்னர்கள் எண்ணிக்கை, தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் முனையம் அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.

Additional Container Terminal Planned at Chennai Port Due to 20% Increase in Container Traffic

June 22, 2025 – 12:46 PM, Chennai

       The number of containers handled at Chennai Port has increased by 20%, prompting plans to establish an additional container terminal, according to port authorities.

     Speaking on the matter, Chennai Port officials stated:

       “We are undertaking various initiatives to modernize the Chennai Port and boost both exports and imports. Specifically, we are progressively working on infrastructure development, marine environmental protection, and improving connectivity with rail and road transport networks.

     Over the past few years, the container traffic has been growing at a rate of 10 to 15%. But now, we’ve witnessed a 20% surge, which has led us to plan the development of an additional terminal to accommodate this growth.”

      This move aims to enhance port efficiency and support the increasing demand for container handling.

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் விரிவாக்கம்

 ஜூன் 21, 2025 01:34 PM

      சென்னை:பாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஐபோன்களுக்கான என்குளோசர் எனும் உடற்பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

      இதற்கான பிரிவை தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள அதன் ‘டிஸ்பிளே மாட்யூல்’ தயாரிப்பு ஆலையில் அமைப்பதற்கான பணிகளை தற்போது துவக்கியுள்ளது.

       டாடா நிறுவனம் மட்டுமே தற்போது இந்த பாகத்தை உள்நாட்டில் தயாரித்து வழங்கும் ஒரே நிறுவனமாக உள்ளது. இந்நிலையில், பாக்ஸ்கானும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

     இதன் வாயிலாக, ஒட்டு மொத்த ஐபோன் உற்பத்தி மதிப்பு 2 முதல் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிதமான வளர்ச்சி என்றாலும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சி யாக கருதப்படுகிறது.

      கடந்த நிதியாண்டில், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Expansion of Foxconn in Tamil Nadu

June 21, 2025 – 1:34 PM

      Chennai: Foxconn has planned to expand its operations in India. As part of this plan, the company intends to manufacture the iPhone enclosures (outer casings of iPhones).

    The work for setting up this new division has already begun at Foxconn’s existing display module manufacturing facility located in Sriperumbudur, Tamil Nadu.

    Currently, Tata is the only company producing and supplying this particular part domestically. In this context, Foxconn’s entry into this segment marks a significant development.

     This move is expected to increase the overall value of iPhone production by 2 to 3 percent. Though the growth is considered moderate, it is seen as impactful.

     It is noteworthy that Apple iPhones worth ₹1.5 lakh crore were exported from India in the last financial year.

‘60,000 தொழில்முனைவோருக்கு 5,000 கோடி ரூபாய் கடனுதவி’ ‘ஆக்மி 2025’ கண்காட்சியில் ஸ்டாலின் தகவல்

ஜூன் 20, 2025 12:47 PM

      சென்னை:“பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில், 59,915 புதிய தொழில்முனைவோருக்கு, 2,031 கோடி ரூபாய் மானியத்துடன், 5,209 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

      அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், ‘ஆக்மி 2025’ சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவக்கி வைத்தார்.

     வரும் 23ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், இயந்திர கருவிகள், லேசர் தொழில்நுட்பம், டிஜிட்டல் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 468 தொழில் நிறுவனங்களின் நவீன தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

     நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

     தமிழகத்தில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.

      இதில், இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில், இந்நிறுவனங்கள் வாயிலாக, 2.47 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகிஉள்ளது.

      பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நான்கு ஆண்டு களில், 59,915 புதிய தொழில்முனைவோருக்கு, 2,031 கோடி ரூபாய் மானியத்துடன், 5,209 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப் பட்டு இருக்கிறது.

      வேலைவாய்ப்பை உருவாக்குவதில், வேளாண்மைக்கு அடுத்த இடத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன.

      இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சிறுதொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு முன்னேற்றம் காண வேண்டும். அதற்கு, நிறுவனங்களுக்கு துணையாக அரசு உறுதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘Loan Assistance of ₹5,000 Crore for 60,000 Entrepreneurs’ – Stalin at ‘ACME 2025’ Expo

June 20, 2025 – 12:47 PM,
Chennai

       “Under various self-employment schemes, over the past four years, loan assistance of ₹5,209 crore has been provided to 59,915 new entrepreneurs, along with a subsidy of ₹2,031 crore,” said Tamil Nadu Chief Minister M. K. Stalin.

      He inaugurated the ‘ACME 2025’ International Machine Tools Exhibition yesterday at the Chennai Trade Centre, Nandambakkam, organized by the Ambattur Industrial Estate Manufacturers Association.

      The exhibition, which will run until June 23, features stalls from 468 domestic and international industrial companies, showcasing advanced products in machine tools, laser technology, and digital manufacturing, among others.

     In his address at the event, the Chief Minister said:

     “Tamil Nadu’s industrial sector is witnessing tremendous growth. The state has over 3.5 million registered micro, small, and medium enterprises (MSMEs).

     Tamil Nadu ranks third at the national level, and through these MSMEs, employment has been created for 2.47 crore people.

     In the last four years, through various self-employment schemes, 59,915 new entrepreneurs have been supported with ₹5,209 crore in loans and ₹2,031 crore in subsidies.

      In terms of employment generation, MSMEs rank just behind agriculture.

      The advanced technologies displayed in this exhibition should be utilized by small-scale industries to drive progress in Tamil Nadu. The government will stand firmly behind these enterprises in their growth journey.”

      This was the statement made by the Chief Minister during the event.

சேவைத்துறை ஏற்றுமதிபியோமகிழ்ச்சி

 ஜூன் 18, 2025 12:27 PM

      கோவை,:இந்திய ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 2.8 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இதில் சேவைத் துறையின் பங்களிப்பு அதிகமாக உள்ளதாக, இந்திய ஏற்றுமதி அமைப்புகளுக்கான கூட்டமைப்பு (பியோ) தெரிவித்துள்ளது.

      பியோ தலைவர் ரால்ஹான் அறிக்கை:

      உலக அளவில் வர்த்தக துறையில், பல்வேறு தடைகள் இருந்தபோதும், இந்திய ஏற்றுமதி மே மாதம் 2.8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

      இதற்கு, சேவைத்துறை குறிப்பாக மென்பொருள், ஆலோசனை மற்றும் நிதி சேவைகளில் தொடர்ந்த வளர்ச்சிதான் காரணம். உலகளாவிய மந்தமான சேவை, புவிசார் அரசியல் பதற்றங்கள், கடும் சவால்களுக்கு இடையே, இந்திய சேவைத்துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.

      இறக்குமதியும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 5.30 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 5.06 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

       இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Service Sector Export Growth: FIEO Delighted

June 18, 2025 – 12:27 PM,

Coimbatore:
      India’s exports saw a 2.8% growth in the month of May. The Federation of Indian Export Organisations (FIEO) stated that the service sector played a significant role in this growth.

     Statement by FIEO President Ralhan:
Despite various global trade barriers, India’s exports recorded a 2.8% increase in May. This growth is mainly attributed to the continued progress in services, especially in software, consultancy, and financial services.

       Even amidst global service slowdown, geopolitical tensions, and severe challenges, India’s service sector has shown remarkable performance.

     Imports, when compared to the same period last year, have declined from ₹5.30 lakh crore to ₹5.06 lakh crore.

      This was stated in the official report.

வேலையின்மை 5.60 சதவீதமாக அதிகரிப்பு

  ஜூன் 17, 2025 10:59 PM

     புதுடில்லி, : நாட்டின் வேலையின்மை விகிதம், கடந்த மே மாதம் 5.60 சதவீதமாக அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பெண்களிடையே வேலையின்மை விகிதம் 5.80 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இது, ஆண்களிடையே 5.60 சதவீதமாக இருந்தது.

      கடந்த ஏப்ரலில் 5.10 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், கடந்த மாதம் 5.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

       வயது வாரியாக பார்க்கும்போது, 29 வயதுக்கு உட்பட்டவர்களிடையே வேலையின்மை விகிதம், 13.80 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

Unemployment Rises to 5.60%

June 17, 2025 – 10:59 PM,

      New Delhi: India’s unemployment rate increased to 5.60% in the month of May, according to a report from the Ministry of Statistics and Programme Implementation. Notably, the unemployment rate among women rose to 5.80%, while it stood at 5.60% among men.

      In April, the overall unemployment rate was 5.10%, which has now increased to 5.60% in May.

      When viewed by age group, the unemployment rate among individuals below the age of 29 increased from 13.80% to 15%.

இஸ்ரேல்ஈரான் மோதலால் இந்திய ஏற்றுமதிக்கு சிக்கல்

 ஜூன் 16, 2025 12:37 PM

      புதுடில்லி:இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றத்தைத் தொடர்ந்து, இந்திய ஏற்றுமதிக்கான சரக்கு போக்குவரத்து செலவு 20 சதவீதம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

      ஏற்கனவே இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க அந்நாடு தடை விதித்துள்ள நிலையில், தற்போது ஈரானின் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து செலவு மேலும் அதிகரிக்கக்கூடும்.

      மற்றொரு புறம் கச்சா எண்ணெயின் விலை 8 சதவீதம் அதிகரித்துள்ளதால், கப்பல் போக்குவரத்து செலவும் அதிகரிக்கும். வழக்கமாகவே, சரக்கு கப்பல் போக்குவரத்தைக் காட்டிலும், சரக்கு விமான போக்குவரத்துக்கு 8 சதவீதம் கூடுதல் செலவாகும்.

      பல மாதங்களுக்குப் பிறகு, கடந்த சில வாரங்களுக்கு முன்தான் செங்கடல் வழியாக இந்தியா சரக்கு போக்குவரத்தை மீண்டும் துவங்கியது. இந்நிலையில், தற்போதைய சூழலால், செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியில் கப்பல் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

     ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 80 சதவீதமும்; அமெரிக்காவுக்கான பெரும்பான்மையான ஏற்றுமதியும் செங்கடல் வாயிலாகவே அனுப்பப்படுகிறது.

Israel-Iran Conflict Disrupts Indian Exports

 June 16, 2025, 12:37 PM
 

     New Delhi: Following the rising war tensions between Israel and Iran, the cost of cargo transportation for Indian exports is expected to increase by up to 20%.

      Already, Indian aircraft are banned from flying over Pakistan’s airspace. Now, with Iran’s airspace also closed, air cargo transport costs are set to rise further.

      On the other hand, crude oil prices have surged by 8%, which will also increase shipping costs. Generally, air cargo transport is already about 8% more expensive than sea cargo transport.

       After several months of disruption, India had only recently resumed its cargo shipping via the Red Sea. However, due to the current situation, shipping through the Red Sea and Suez Canal is once again expected to be affected.

      Around 80% of India’s exports to European countries, and a majority of exports to the United States, are sent via sea routes.

மின்சார கார் சந்தை 4 சதவீதமாக அதிகரிப்பு

ஜூன் 12, 2025 07:12 AM

      புதுடில்லி : இந்திய பயணியர் கார் சந்தையில், மின்சார கார்களின் பங்கு 4.10 சதவீதமாக உயர்ந்து, புதிய மைல்கல்லை எட்டி உள்ளதாக, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள மே மாத விற்பனை தரவுகள் தெரிவிக்கின்றன.

      கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனை 2.60 சதவீதமாகவும்; கடந்த ஏப்ரலில் 3.50 சதவீதமாகவும் இருந்தது.

     கடந்த ஆண்டு மே மாதத்தில் 8,029 மின்சார கார்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு இதே மாதத்தில் 12,304 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 4,351 மின்சார கார்களை விற்பனை செய்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

     அதை தொடர்ந்து, 3,765 கார்களை விற்பனை செய்து, எம்.ஜி., மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், 2,632 கார்களை விற்பனை செய்து, மஹிந்திரா மூன்றாவது இடத்திலும் உள்ளன. மொத்தம் விற்பனையான மின்சார கார்களில், இந்த மூன்று நிறுவனங்களின் சந்தை பங்கு மட்டும் 87 சதவீதம்.

Electric Car Market Rises to 4% Share

June 12, 2025 – 07:12 AM

      New Delhi: The market share of electric cars in India’s passenger vehicle segment has reached a new milestone, increasing to 4.10%, according to May sales data released by the Federation of Automobile Dealers Associations (FADA).

      In comparison, the share was 2.60% in May last year and 3.50% in April this year.

       While 8,029 electric cars were sold in May last year, the number rose to 12,304 in May this year.

Tata Motors topped the chart with sales of 4,351 electric cars, followed by MG Motors in second place with 3,765 units, and Mahindra in third with 2,632 units.

      Together, these three companies account for 87% of the total electric car market share in the country.

அனைத்து மகளிர் ஆலையாகிறது; செய்யாறு என்பீல்டு தொழிற்சாலை

ஜூன் 11, 2025 07:11 AM

      சென்னை : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில், பெண்கள் மட்டும் உற்பத்தி செய்யும் பிரத்யேக உற்பத்தி தடம் உள்ளது.

    இந்நிலையில், இந்த ஆலையை அனைத்து பெண்கள் ஆலையாக மாற்ற உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

     அவரின் சமூக வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    என்பீல்டு நிறுவனத்தின் செய்யாறு ஆலையில், அனைத்து பெண்கள் உற்பத்தி தடத்தை உருவாக்கி உள்ளோம். இந்த ஆலையில், 100 சதவீதம் பெண்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் வகையில், அனைத்து பெண்கள் ஆலையாக மாற்ற பணிகள் நடந்து வருகின்றன.

     கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில், பெண்கள் 5 சதவீதம் மட்டுமே இருந்தனர். தற்போது அது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தின் வல்லம் ஆலையில், 26 சதவீதம் அளவுக்கு பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

     பொறியியல் உற்பத்தியில் துவங்கி சந்தைப்படுத்துதல் மற்றும் இதர வணிக பிரிவுகளில் பெண்கள் பணியாற்றி, என்பீல்டு நிறுவனத்தின் எதிர்காலத்தை உருமாற்றி வருகின்றனர்.

     கடந்த நிதியாண்டில் நியமிக்கப்பட்ட புதிய பணியாளர்களில் 24 சதவீதம் பேர் பெண்கள். இது, கடந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     அதேபோல், கட்டுமான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஸ்விங் ஸ்டெட்டர், அசோக் லேலாண்ட், எல்.ஜி., எக்யுப்மென்ட்ஸ், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள், வாகன மற்றும் இயந்திர உற்பத்தியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றன.

    நாடு முழுதும் உற்பத்தி துறையில் பணியாற்றி வரும் பெண்களில், 43 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர்.

All-Women Assembly Line: Royal Enfield’s Chengam Factory to Become Fully Female-Operated

June 11, 2025 – 07:11 AM

    Chennai: At the Royal Enfield manufacturing plant located in the Chengam area of Tiruvannamalai district, Tamil Nadu, a dedicated all-women production line is already in place. Now, the company plans to convert the entire factory into an all-women-operated facility, according to its CEO Govindarajan.

In a post shared on his social media, he stated:

     “We have established an all-women production line at our Chengam plant. Work is currently underway to convert this unit into a 100% women-operated facility.”

      A few years ago, only 5% of the company’s total workforce were women. That figure has now increased to 20%. The highest representation is at the Vallam plant in Kanchipuram, where 26% of employees are women.

      Women are working across various domains — from engineering and manufacturing to marketing and other business functions — helping to shape the future of Royal Enfield.

      In the past financial year, 24% of the newly recruited employees were women, which surpassed the company’s target set for that year.

He further mentioned:

     Several companies like Schwing Stetter, Ashok Leyland, LG Equipments, and Ola are also giving priority to employing women in automobile and machinery production.

     Nationwide, 43% of women employed in the manufacturing sector are based in Tamil Nadu.

ஆக்மி 2025′ இயந்திர கருவிகள் கண்காட்சி சென்னையில் ஜூன் 19 முதல் நடக்கிறது.

ஜூன் 10, 2025 07:03 PM

      சென்னை :  அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கமான ஏ.ஐ.இ.எம்.ஏ., ‘ஆக்மி 2025’ என்ற பெயரில் இயந்திர கருவிகள் கண்காட்சியை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடத்துகிறது. இதில், பல நாடுகளின் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

     இது குறித்து, சங்கத்தின் தலைவர் சதீஷ்பாபு கூறியதாவது:

      அம்பத்துார் தொழிற்பேட்டையில் 2,000 தொழில் நிறுவனங்களும், தொழிற்பேட்டையை சுற்றி 5,000 நிறுவனங்களும் செயல்படுகின்றன. அவற்றின் வாயிலாக ஆண்டுக்கு, 20,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. அதில், 30 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

       ஆக்மி 2025 கண்காட்சி, மாறி வரும் வணிக சூழலின் பின்னணியில் நடத்தப்படுகிறது.

       இதன் வாயிலாக, தொழில் துறையில் வலுவான ஆர்வம் ஏற்படும். தொழில்முனைவோரும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களும், உலகளவில் இயந்திர கருவிகள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை தெரிந்து கொள்ள முடியும்.

      கடந்த 2023ல் நடந்த கண்காட்சியில், 600 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. இந்தாண்டு, 750 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயந்திர கருவிகள், லேசர் தொழில்நுட்பம், தொழிற்சாலை ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 n கடந்த 1994 முதல், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆக்மி கண்காட்சி நடத்தப்படுகிறது

n இதன் 16வது கண்காட்சி வரும் 19ல் துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது

n நவீன இயந்திர கருவிகள், தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும்

n இந்தாண்டு கண்காட்சியில், 468 நிறுவனங்கள் பங்கேற்கின்றன

n கண்காட்சியில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.  

ACMEE 2025″ Machine Tools Exhibition to be Held in Chennai from June 19

June 10, 2025 – 07:03 PM

     Chennai: The Ambattur Industrial Estate Manufacturers Association (AIEMA) is organizing a machinery tools exhibition named “ACMEE 2025” at the Chennai Trade Centre, Nandambakkam, from June 19 to 23. Several industrial companies from different countries will participate in the event.

     Regarding this, the Association’s President, Satish Babu, said:

     There are around 2,000 industrial units operating in the Ambattur Industrial Estate and 5,000 companies in the surrounding areas. Through these, an annual business turnover of ₹20,000 crore is achieved, with 30% of it being exports.

     The ACMEE 2025 exhibition is being held in the context of a changing business environment.

     Through this event, strong interest in the industrial sector will be generated. Entrepreneurs and startup companies will have the opportunity to learn about the latest global advancements in machinery tools and manufacturing technologies.

     In the previous exhibition held in 2023, business deals worth ₹600 crore were made. This year, business transactions worth ₹750 crore are expected. Various sectors including machine tools, laser technology, industrial robotics, and artificial intelligence will participate.

He also stated the following:

  • Since 1994, the ACMEE exhibition has been conducted once every two years.
  • The 16th edition of the exhibition will take place from June 19 to 23.
  • Modern machinery and technologies will be showcased.
  • 468 companies are participating this year.
  • A buyer-seller meet will be held during the exhibition.

திருப்பூருக்கு சிறிய தொழிற்பூங்காகுறு, சிறு நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்

ஜூன் 09, 2025 12:43 PM

        திருப்பூர்; ‘புதிய தொழிற்சாலைகளை உருவாக்க, தமிழக அரசின் சிறிய தொழிற்பூங்கா திட்டத்தில், திருப்பூருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

       ஏற்றுமதியில் மட்டுமல்லாமல், உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியிலும் முன்னோடியாக திகழ்கிறது, திருப்பூர். பருத்தி நுாலிழையில் தயாரிக்கப்படும் பின்னல் துணியில் இருந்து, ஆடைகள் தயாரித்து, நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.

      நாடு முழுவதும் உள்ள சில்லரை வியாபாரிகள், திருப்பூரில் ஆடைகளை தைத்து பெறுகின்றனர். எனவே, ஏற்றுமதி நிறுவனங்கள், பெரியளவில் இயங்கும் உள்நாட்டு விற்பனைக்கான பனியன் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு பனியன் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், ‘புதிய தொழிற் பூங்கா திட்டம்’ திருப்பூரின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக அவசியம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

      கடந்த 25 ஆண்டுகளில், முதலிபாளையம், திருப்பூரில் உள்ள ‘சிட்கோ’ வளாகம், புதிய திருப்பூர் நேதாஜி தொழிற் பூங்கா ஆகியவை, சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆதிதிராவிட தொழில் முனைவோருக்காக உருவாக்கப்பட்ட, ‘தாட்கோ’ தொழிற்பேட்டை பயன்பாடின்றி பாழானது; ஒரு சில தொழில் முனைவோர் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்; தற்போது, அங்கு பெரியளவில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.

      ‘இதுவரை அமைந்த தொழிற்பூங்காக்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் பயனுள்ளதாக இருந்தது; குறு, சிறு நிறுவனங்களுக்கு இத்தகைய அரசு சலுகை திட்டங்கள் சென்றடையவில்லை’ என்ற ஆதங்கம் தென்படுகிறது.

Mini Industrial Park for Tiruppur… Boost for Micro and Small Enterprises

June 09, 2025 – 12:43 PM

      Tiruppur: There is growing demand for the Tamil Nadu government to give priority to Tiruppur under its Mini Industrial Park Scheme to support the development of new industries.

     Tiruppur is a leader not only in exports but also in domestic production of baniyan (innerwear) garments. Garments made from cotton yarn-based knitted fabric are manufactured here and distributed to markets across the country.

     Retail traders from across India get their garments stitched in Tiruppur. Therefore, the new industrial park scheme is seen as crucial for Tiruppur’s future growth, benefitting export companies, large-scale domestic garment manufacturers, and micro and small innerwear producers.

     Over the past 25 years, the SIDCO complex in Mudalipalayam and the New Tiruppur Netaji Apparel Park have been operating successfully. However, the TAHDCO industrial estate, built for SC entrepreneurs, has remained largely unused, with only a few entrepreneurs currently utilizing the facility. Large-scale development works are now underway at the site.

     There is concern that existing industrial parks have mostly benefitted small and medium enterprises, while micro and tiny units have not received adequate support through such government schemes.

வியட்நாம் முதலீட்டை ஈர்க்க தமிழக மையம்

மே 21, 2025 06:37 AM

       சென்னை : தமிழகத்திற்கு பெரிய தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை, தமிழக அரசின், ‘கைடன்ஸ்’ எனப்படும் வழிகாட்டி நிறுவனம் மேற்கொள்கிறது.

        இந்நிறுவனம், அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு, தமிழகத்தில் தொழில் துவங்க நேரடி வழிகாட்டுதல், ஆதரவு சேவை வழங்கும் வகையில் அந்நாடுகளில் ‘கைடன்ஸ் டெஸ்க்’ எனப்படும் அமர்வை அமைக்க உள்ளது.

       இதன்படி, வியட்நாமில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வை, அந்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா துவக்கி வைத்தார்.

      இந்த அமர்வில், தமிழக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு உள்ள நபர், வியட்நாமில் உள்ள நிறுவனங்களை தொடர்புகொண்டு, தமிழகத்தில் தொழில் துவங்க, அரசு அளிக்கும் சலுகைகள் தொடர்பான விபரங்களை தெரிவிப்பார்.

Tamil Nadu Sets Up Investment Facilitation Desk in Vietnam

May 21, 2025 – 06:37 AM

         Chennai: The Tamil Nadu government’s investment promotion agency, known as “Guidance,” is actively working to attract major industrial investments to the state.

        As part of this effort, the Guidance agency is planning to set up “Guidance Desks” in countries such as the United States, Germany, South Korea, and Vietnam. These desks will provide direct guidance and support services to investors from these countries who are interested in starting industries in Tamil Nadu.

      Accordingly, the Guidance Desk in Vietnam was inaugurated by Tamil Nadu’s Minister for Industries, Mr. Raja, who is currently visiting the country to attract investments.

        A representative appointed by Tamil Nadu will be stationed in Vietnam to liaise with companies there, sharing details about the incentives and support offered by the Tamil Nadu government to start businesses in the state.

பிரதமரின் தொழில் பயிற்சி திட்டம்; வாய்ப்பளித்ததில் தமிழகம் முதலிடம்

மே 20, 2025 06:42 AM

       புதுடில்லி : பிரதமரின் தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், அதிக எண்ணிக்கையில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் மாநிலங்களில், தமிழகம் முதலிடம் பிடித்துஉள்ளது.

       கடந்த பட்ஜெட் தாக்கலின் போது, பிரதமரின் தொழில் பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் 21 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கு, முன்னணி நிறுவனங்களில் 12 மாதங்கள் தொழில் பயிற்சியுடன், மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகை, மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை 6,000 ரூபாய் வழங்கப்படும்.

      இத்திட்டத்தின் வாயிலாக, திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து, தகுதியான வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியும் என, மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

      இதற்கான முதல் சுற்று விண்ணப்பப் பதிவு, கடந்தாண்டு அக்.,3ம் தேதி துவங்கி முடிவடைந்தது

      இரண்டாவது சுற்று விண்ணப்பப் பதிவில், 735 மாவட்டங்களில் உள்ள 327 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 1.19 லட்சம் தொழில் பயிற்சி வாய்ப்புகளை வழங்கின.

       வாகனத் தயாரிப்பு, சுற்றுலா, வங்கி, நிதி, உற்பத்தி, நுகர்பொருட்கள் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு கல்வித்தகுதியை கொண்ட இளைஞர்களுக்கு நிறுவனங்கள் வாய்ப்புகளை வழங்கி இருந்தன.

       இந்நிலையில், பிரதமர் தொழில் பயிற்சி திட்டத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தரவுகளின்படி, மொத்த தொழில் பயிற்சி வாய்ப்புகள் அளித்த மாநிலங்களில், 13.25 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

      மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்து உள்ளன.

Prime Minister’s Skill Training Scheme: Tamil Nadu Leads in Providing Opportunities

 May 20, 2025, 06:42 AM

        New Delhi: Under the Prime Minister’s Skill Training Scheme, Tamil Nadu has secured the top position among the states that have provided the highest number of opportunities to youth.

       The scheme was announced during the previous budget presentation. Under this initiative, selected youth aged between 21 and 24 are offered 12 months of skill training with leading companies. They receive a monthly stipend of ₹5,000 and an annual grant of ₹6,000.

         The Central Government had stated that this scheme aims to identify talented youth and help them access suitable employment opportunities.

       The first round of applications for this scheme began and ended on October 3 of last year. In the second round of application registrations, 327 leading companies from 735 districts participated and offered 1.19 lakh skill training opportunities.

       These opportunities were provided to youth with various educational qualifications in sectors such as automobile manufacturing, tourism, banking, finance, manufacturing, and consumer goods.

       According to data published on the official website of the Prime Minister’s Skill Training Scheme, Tamil Nadu has taken the top position among the states in terms of total training opportunities provided, contributing 13.25% of the total.

      Maharashtra and Gujarat secured the second and third positions respectively.

இந்தியாஐரோப்பிய யூனியன் இடையே மற்றொரு சுற்று வர்த்தக பேச்சு நிறைவு

மே 19, 2025 12:10 PM

       புதுடில்லி:இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான மற்றொரு சுற்று பேச்சு முடிந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு கட்டங்களாக இறுதி செய்ய, இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

      இந்தியா மற்றும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் இடையே, வர்த்தக ஒப்பந்தத்திற்கான மற்றொரு சுற்று பேச்சை இரு நாடுகளும் பேசி முடித்துள்ளன.

      அமெரிக்காவின் வரி விதிப்பின் காரணமாக, உலகளவில் நிச்சயமற்ற வர்த்தக சூழல் நிலவுவதால், தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இரண்டு கட்டங்களாக முடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

       ஆஸ்திரேலியா உடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு பின்பற்றப்படும் இரண்டு கட்ட பேச்சு நடத்தும் நடைமுறையை, இந்தியா தற்போதைய பேச்சிலும் பின்பற்றியுள்ளது.

       இப்பேச்சில் சரக்குகள், சேவைகள் மற்றும் முதலீட்டில் சந்தை அணுகல் சலுகைகள் குறித்து பேச்சு நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.

       இத்துடன், தாராள வர்த்தக ஒப்பந்தத்துடன், முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் புவியியல் சார்ந்த ஒப்பந்தம் ஆகியவை குறித்தும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

India-EU Conclude Another Round of Trade Talks

May 19, 2025, 12:10 PM

         New Delhi: Another round of negotiations between India and the European Union (EU) for a Free Trade Agreement (FTA) has concluded. According to an official, both sides have agreed to finalize the agreement in two phases.

       India and the 27-member European Union have completed another round of discussions regarding the trade agreement. Due to global trade uncertainty caused by U.S. tariff policies, both parties have agreed to conclude the Free Trade Agreement in two stages.

        India has followed the same two-phase negotiation approach in the current talks, similar to the one used during its Free Trade Agreement negotiations with Australia.

        It is reported that the talks covered market access concessions in goods, services, and investments.

       In addition to the Free Trade Agreement, discussions are also ongoing regarding an Investment Protection Agreement and a Geographical Indications (GI) Agreement.

சிறுதொழில்களுக்கு நிலுவை அதிகாரிகளுக்கு சிப்காட் உத்தரவு

 மே 14, 2025 11:44 PM

     சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்த பொருட்களுக்கு, பெரிய நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் பணம் வழங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை, தமிழக அரசின், ‘சிப்காட்’ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

      தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, பெரிய நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கும் பல பெரிய நிறுவனங்கள், அதற்கான பணத்தை குறித்த காலத்தில் தருவதில்லை என, புகார்கள் எழுகின்றன.

     இந்நிலையில், சிப்காட் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

       சட்டப்படி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வழங்கும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான பணம், 45 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். தாமதம் ஆனால், வங்கி வட்டி விகிதத்தை விட மூன்று மடங்கு வட்டியுடன் சேர்த்து நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும். பணம் கிடைக்காத நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ., கவுன்சிலில் உதவி பெறலாம். அல்லது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகலாம்.

       இவை, சரியான நேரத்தில் பணம் கிடைப்பதை உறுதி செய்வதையும், நிறுவனங்களின் நிதி நிலைமையையும் பாதுகாக்கின்றன. பெரிய நிறுவனங்கள் விதிமுறைப்படி நடக்கின்றனவா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SIPCOT Issues Directive to Officials on Pending Payments to Small Industries

May 14, 2025 – 11:44 PM

     Chennai: Tamil Nadu’s industrial development body SIPCOT has issued instructions to its officials to ensure that large companies make payments within 45 days for goods purchased from Micro, Small, and Medium Enterprises (MSMEs).

      In Tamil Nadu, many large and public sector companies procure spare parts and various other products from MSMEs. However, there have been complaints that these larger companies often delay payments beyond the stipulated time frame.

      In a recent circular, SIPCOT stated the following:

     “As per law, payments for goods or services provided by MSMEs must be made within 45 days. In case of delay, the outstanding amount must be paid with interest at three times the bank rate.

     If payments are not received, MSMEs can approach the MSME Council for help or take the matter to the National Company Law Tribunal (NCLT).

    These measures are meant to ensure timely payments and protect the financial health of MSMEs.

     Officials must ensure that large companies comply with these rules.”

     This directive aims to strengthen financial support and fairness for small-scale industries.

ராணுவ தளவாட நிறுவனங்கள் பங்குகள் விலை அதிகரிப்பு பிரதமர் மோடி உரை எதிரொலி

மே 13, 2025 11:25 PM

       மும்பை:இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில், சுயசார்பை எட்ட வேண்டிய அவசியம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், நேற்றைய வர்த்தகத்தின் போது, ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வு கண்டன.

       நிப்டி ராணுவ தயாரிப்பு நிறுவனங்களின் குறியீடு 4.12 சதவீதம் உயர்வு கண்டு, 7,432 புள்ளிகளில் நிறைவு செய்தது. ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள், 3 முதல் 11 சதவீதம் வரை உயர்வு கண்டன.

       பாகிஸ்தானின் பயங்கரவாத நிலைகள் மீதான தாக்குதலில், இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாக, ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், ஆகாஷ் ஏவுகணையின் முக்கிய தயாரிப்பாளரான பாரத் டைனமிக்ஸ் பங்குகள் 11 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து, பங்கு ஒன்றின் விலை 1,750 ரூபாய்க்கு வர்த்தகமானது.

Military Equipment Company Shares Surge Following PM Modi’s Speech

May 13, 2025 – 11:25 PM

      Mumbai: Shares of Indian defense equipment manufacturing companies saw a significant rise in trading yesterday, following Prime Minister Modi’s emphasis on the need for self-reliance in military equipment production.

       The Nifty index for defense manufacturing companies rose by 4.12%, closing at 7,432 points. Shares of various defense equipment manufacturing firms saw an increase ranging from 3% to 11%.

        This surge comes in the backdrop of Air Marshal A.K. Bharti commending the successful performance of India’s Akash missile in recent strikes against terrorist positions in Pakistan. As a result, shares of Bharat Dynamics, the primary manufacturer of the Akash missile, surged by over 11%, with the stock trading at ₹1,750 per share.

ஸ்டார்ட் – அப் கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக அதிகரிப்பு

மே 10, 2025 12:40 PM

       புதுடில்லி:ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், இந்நிறுவனங்களுக்கான அதிகபட்ச கடன் தொகையை 20 கோடி ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

      ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 2022ம் ஆண்டிலிருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

      இதன்படி, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களிடம், 10 கோடி ரூபாய் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறலாம்.

புதிய மாற்றம்

  • 10 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, 85 சதவீதம் வரை உத்தரவாதம்
  • 10 கோடி ரூபாய்க்கு அதிகமான கடன்களுக்கு, 75 சதவீதம் வரை உத்தரவாதம்
  • அதிகபட்ச கடன் உத்தரவாதம் 20 கோடி ரூபாய்
  • நிறுவனங்களுக்கான ஆண்டு உத்தரவாத கட்டணம், 27 சாம்பியன் துறைகளுக்கு 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைப்பு.

பலன்கள்

  • ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான அபாயம் குறையும்
  • நிதி புழக்கத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்
  • ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள உதவும்
  • அதிநவீன கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களை உருவாக்கவும் வழிவகுக்கும்.

Start-Up Loan Guarantee Increased to ₹20 Crore

May 10, 2025 – 12:40 PM

      New Delhi: In a move to make it easier for start-up companies to obtain loans, the central government has increased the maximum loan amount covered under the loan guarantee scheme to ₹20 crore.

      As part of the ‘Start-up India’ initiative, the central government has been implementing a loan guarantee scheme for start-ups since 2022.

      Accordingly, companies registered with the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), which operates under the Ministry of Commerce and Industry, can obtain loans of up to ₹10 crore without collateral from banks and financial institutions.

New Changes:

  • For loans up to ₹10 crore, up to 85% guarantee coverage
  • For loans above ₹10 crore, up to 75% guarantee coverage
  • Maximum loan guarantee increased to ₹20 crore
  • Annual guarantee fee for companies in 27 champion sectors reduced from 2% to 1%

Benefits:

  • Reduced risk for lending to start-up companies
  • Increased financial liquidity opportunities
  • Supports research, development, and experimentation
  • Enables creation of advanced innovations and technologies

செயற்கைக்கோள் வழி இணைய சேவை ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி

மே 09, 2025 12:10 PM

       புதுடில்லி:இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குவதற்கு, எலான் மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்தை ஏற்று, மத்திய அரசு பூர்வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. அரசிடம் இருந்து உரிமத்தை பெற்ற பிறகு, இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயல்பாடுகளை துவங்கலாம்.

        நாட்டின் செயற்கைக்கோள் இணைய சேவை சந்தை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தனியார் துறையும் செயற்கைக்கோள் சேவைகளை வழங்க அனுமதிக்கும் விதமாக, கடந்த 2023ல் மத்திய அரசு இந்திய விண்வெளி கொள்கையை வெளியிட்டது. இதையடுத்து, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

       ஏற்கனவே, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், ஸ்டார்லிங்க், குய்பர் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் டிராய் அமைப்பின் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 7ம் தேதி மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி கடிதம் அளித்தது.

Satellite Internet Service: Approval for Elon Musk’s Starlink

May 09, 2025 – 12:10 PM

        New Delhi: The central government has granted preliminary approval to Elon Musk’s Starlink for providing satellite-based internet services in India. Once the company obtains the required license from the government, it can officially begin operations in the country.

       India’s satellite internet market is rapidly expanding. To allow private players to offer satellite services, the government released the Indian Space Policy in 2023. Following this, several domestic and international companies have shown interest in entering the satellite internet space.

      While companies like Airtel and Jio have already received approvals, applications from Starlink and Project Kuiper are under review by the Telecom Regulatory Authority of India (TRAI). In this context, on May 7, the Department of Telecommunications officially issued a permission letter to Starlink.

 

தொழிற்கல்வியை மேம்படுத்த ரூ.60,000 கோடியில் திட்டம்

மே 08, 2025 12:08 PM

        புதுடில்லி:இந்தியாவின் தொழிற்கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக, 60,000 கோடி ரூபாய் செலவில், தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

      குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

புதிய திட்டத்தின் கீழ் 1,000 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், ஒரே மையத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, தொழிற்சாலைக்கு ஏற்ற வகையில், பயிற்சிகளை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தப்படும்.

ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களை திறன் மிக்கவர்களாக மாற்றுவது

 சென்னை, புவனேஸ்வர், ஹைதராபாத், கான்பூர், லுாதியானாவில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு

 50,000 பயிற்றுநர்களுக்கு திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது

 எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் கூடுதல் கவனம்.

பங்களிப்பு

மத்திய அரசு ரூ.30,000 கோடி

மாநிலங்கள் ரூ.20,000 கோடி

₹60,000 Crore Scheme to Improve Vocational Education

     May 08, 2025 – 12:08 PM

          New Delhi: In a move to transform India’s vocational education system, the Union Cabinet has approved a national scheme to upgrade industrial training institutes (ITIs) at a cost of ₹60,000 crore.

Key Highlights:

  • Under the new scheme, 1,000 government-run Industrial Training Institutes will be integrated under a unified system, with a focus on restructuring training programs to suit industrial requirements.
  • The goal is to skill 2 million (20 lakh) youth over five years.
  • Infrastructure development will be prioritized in Chennai, Bhubaneswar, Hyderabad, Kanpur, and Ludhiana.
  • 50,000 trainers will be trained under the scheme.
  • Special focus will be given to the electronics, automobile, and renewable energy sectors.

Funding Contribution:

  • Central Government: ₹30,000 crore
  • State Governments: ₹20,000 crore

.பி.., வருகிறதுமௌரி டெக்

மே 07, 2025 11:58 PM

       செயற்கை நுண்ணறிவை முதன்மையாகக் கொண்டு, தகவல் தொழில்நுட்ப சேவைகள் வழங்கி வரும் ‘மௌரி டெக்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு விண்ணப்பித்திருந்த நிலையில், வெளிப்படையாக காரணம் கூறாமல், கடந்த டிசம்பரில் விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது.

       இந்நிலையில், தற்போது புதிய பங்கு வெளியீடு வாயிலாக 250 கோடி ரூபாயும்; பங்குதாரர்களின் பங்கு விற்பனை வாயிலாக 1,250 கோடி ரூபாயும் திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. திரட்டப்படவுள்ள நிதி, அமெரிக்காவில் உள்ள துணை நிறுவனத்தின் கடன்களை திருப்பி செலுத்தவும், நிறுவனங்களை கையகப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPO Coming Soon: Mauri Tech

May 07, 2025 – 11:58 PM
   

          Mauri Tech, a company primarily focused on artificial intelligence and providing IT services, has applied to SEBI to raise ₹1,500 crore through an Initial Public Offering (IPO). The company had applied last year as well but withdrew its application in December without disclosing a clear reason.

       Now, in its latest filing, the company stated it plans to raise ₹250 crore through fresh issue of shares and ₹1,250 crore through an offer for sale by existing shareholders. The funds raised will be used to repay debts of its U.S.-based subsidiary and for acquiring other companies, according to the company.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை நிறுவனங்களுக்கு நிதியுதவி

மே 04, 2025 11:58 PM

      சென்னை:சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் ஈடுபட்டுள்ள, ‘ஸ்டார்ட்அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு நிதியுதவி அளிக்கிறது.

இதுகுறித்து, அரசு செய்திக்குறிப்பு:

      காலநிலை மாற்றத்தால் பூமிக்கும், பூமியில் வாழும் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தணிக்கவும், காலநிலை மீள்திறனை வளர்த்தெடுக்கவும் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.

       இச்சவால்களை எதிர்கொள்ள, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை ஆற்றல், வள சுரண்டலை தடுக்க சுற்றுச்சூழல் – மாற்று தீர்வுகள், காலநிலை நிதி மற்றும் நிலையான தொழில்நுட்பங்களுக்கு பங்கு அளிக்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, ஆதரித்து வளர்த்தெடுக்க, ‘சஸ்டெய்ன் டி.என்’ எனும் முன்னெடுப்பு, 2024 – 25ல் காலநிலை மாற்ற துறையால் அறிவிக்கப்பட்டது.

       இதன் தொடர்ச்சியாக, தமிழக காலநிலை மாற்ற இயக்கமானது, அண்ணா பல்கலை மற்றும், ‘ஸ்டார்ட்அப்’ டி.என்., நிறுவனத்துடன் இணைந்து, மேற்கூறிய துறைகளில் சிறப்பாக செயல்பட கூடிய வகையில் உள்ள, 10 புத்தொழில் நிறுவனங்கள், புத்தொழில் கருத்துருக்கள் அடையாளம் காணப்பட்டு, அவை வணிகத்தை விரிவுபடுத்த, 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுவதுடன், சந்தை வாய்ப்புகளும் உருவாக்கி தரப்படும்.


Financial Support for Environmental Startups

May 04, 2025 – 11:58 PM

       Chennai: The Tamil Nadu government is providing financial assistance to startups involved in environmental protection sectors.

According to a government press release:

      Climate change poses a threat to the Earth, all living beings, and their livelihoods. Therefore, urgent measures are needed to mitigate the effects of climate change and to enhance climate resilience.

       To address these challenges, the Tamil Nadu government launched an initiative called “Sustain TN” in 2024–25 through the Department of Climate Change. This initiative aims to identify and support startups working in areas such as environmental protection, green energy, sustainable resource management, climate finance, and eco-friendly technologies.

        As part of this initiative, the Tamil Nadu Climate Change Mission, in collaboration with Anna University and Startup TN, has identified 10 promising startups and innovative projects in these fields. Each of these startups will receive a grant of ₹10 lakh to expand their business, along with access to new market opportunities.

 

இருசக்கர மின் வாகன விற்பனை 40 சதவிகிதம் அதிகரிப்பு

 மே 03, 2025 09:50 PM

       சென்னை:வாகன பதிவேடு தரவுகளின் படி, மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை, கடந்த ஏப்ரலில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், 65,552 வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதத்தில் 91,791 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

      இதில், ஓலா மற்றும் பஜாஜ் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, டி.வி.எஸ்., நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. டி.வி.எஸ்., நிறுவனத்தின் ‘ஐ க்யூப்’ மின்சார ஸ்கூட்டரின் விற்பனை, 154 சதவீதம் அதிகரித்துள்ளது.

       இரண்டாம் இடத்தில் உள்ள ஓலாவும் மூன்றாம் இடத்தில் பஜாஜ் நிறுவனமும் உள்ளன. இவற்றை ஏத்தர், ஹீரோ மோட்டோகார்ப், கிரீவ்ஸ் எலக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் பின்தொடர்கின்றன.

Electric Two-Wheeler Sales Increase by 40%

May 03, 2025 – 09:50 PM

       Chennai: According to vehicle registration data, the sales of electric two-wheelers increased by 40% this past April. While 65,552 vehicles were sold in April last year, 91,791 vehicles were sold last month.

      Among the manufacturers, TVS has taken the top spot, surpassing Ola and Bajaj. Sales of TVS’s electric scooter, the iQube, have increased by 154%.

       Ola secured the second position, followed by Bajaj in third. Other companies such as Ather, Hero MotoCorp, and Greaves Electric are trailing behind them.

பொது வசதி மையங்களை விரைந்து அமைக்க அறிவுறுத்தல்

 மே 02, 2025 12:32 PM

        சென்னை:தமிழகத்தில் குறைந்த முதலீட்டில் செயல்படும் குறுந்தொழில் நிறுவனங்களால், தங்களின் தொழிலுக்கு தேவைப்படும் நவீன கருவிகள், தளவாடங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக அதிக செலவு செய்ய முடிவதில்லை.

     எனவே, குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இத்தகைய நிறுவனங்கள் பயன் பெற, 222 கோடி ரூபாய் செலவில் 36 பொது வசதி மையங்கள் அமைக்கும் பணி, கடந்த 2022 – 23ல் துவங்கியது. இதில், 178 கோடி ரூபாய் தமிழக அரசின் மானியம்.

     இதன்படி, விருதுநகரில் ஆயத்த ஆடை குழுமம், கன்னியாகுமரியில் ஜவுளி ஆடைகள் குழுமம், கடலுார் விருத்தாசலத்தில் செராமிக் குழுமம் என, மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டு வருகிறது.

      ஒரே தொழிலில் ஈடுபடும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், இங்கெல்லாம் பொது வசதி மையம் அமைக்கப்படுகின்றன. இங்குள்ள நவீன கருவிகள், இயந்திரங்களை, குழுமத்தில் இடம்பெறும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

      இந்த வகையில், செங்கல்பட்டில் புகைப்படக் கலைஞர்களுக்கான மையம் உட்பட, எட்டு குறுந்தொழில் குழும பொது வசதி மையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

      மீதமுள்ள மையங்களை, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருமாறு, மாவட்ட தொழில் மைய அதிகாரிகளை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அறிவுறுத்தியுள்ளது.

Instruction to Expedite the Establishment of Common Facility Centers

May 02, 2025 – 12:32 PM

      Chennai: In Tamil Nadu, small-scale industries operating with limited investment often cannot afford to purchase modern equipment and infrastructure required for their operations.

      To support such enterprises, under the Cluster Development Programme for Small Industries, the establishment of 36 Common Facility Centers (CFCs) was initiated in 2022–23 at a total cost of ₹222 crore, with ₹178 crore provided as a subsidy by the Tamil Nadu government.

      Accordingly, clusters such as the readymade garments cluster in Virudhunagar, textile garments cluster in Kanyakumari, and ceramic cluster in Vriddhachalam (Cuddalore district) are being established across the state. These CFCs are being set up in locations where 20 or more industries engaged in the same sector can benefit. The modern tools and machinery available at these centers can be used by the member industries within the cluster.

       So far, eight small industry cluster-based Common Facility Centers, including one for photographers in Chengalpattu, have been made operational.

        The Department of Micro, Small, and Medium Enterprises has instructed district-level industry center officials to coordinate with industrial units and expedite the operationalization of the remaining centers.

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மார்ச் மாதத்தில் சற்றே உயர்வு

 மே 01, 2025 10:57 PM

       புதுடில்லி: கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

      இது, முந்தைய பிப்ரவரி மாதத்தின் வளர்ச்சியை காட்டிலும் சிறிது அதிகம். பிப்ரவரி வளர்ச்சி முன்பிருந்த 2.90 சதவீதத்திலிருந்து, தற்போது 2.70 சதவீதமாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதத்தின் 5.50 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் வளர்ச்சி சரிந்துள்ளது.

      சமீபத்தில் தொழில் துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை வெளியிடுவதற்கான கால வரையறையை, மத்திய அரசு ஆறு வாரங்களில் இருந்து நான்கு வாரங்களாக குறைத்தது. இதன்படி, முதல்முறையாக கடந்த மாதத்துக்கான தரவுகள் நான்கு வாரங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

      கடந்தாண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு மார்ச்சில் தயாரிப்பு, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் வளர்ச்சி கணிசமாக குறைந்துள்ளது.

     நிதியாண்டு ஒப்பீட்டில், 2024 – 25ம் நிதியாண்டில் சராசரி தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2023 – 24ம் நிதியாண்டில் 5.90 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Slight Increase in Industrial Production Growth in March

May 01, 2025 – 10:57 PM

      New Delhi: The country’s industrial production growth slightly increased to 3% in March, according to data released by the Union Ministry of Statistics.

     This marks a small rise compared to the previous month, February, whose growth figure has been revised down from 2.90% to 2.70%. However, when compared to March of last year, which recorded a 5.50% growth rate, the latest figure indicates a decline in growth.

        Recently, the central government reduced the data release window for industrial production statistics from six weeks to four weeks. Accordingly, for the first time, the data for the previous month has been released within four weeks.

      Compared to March of the previous year, growth in sectors such as manufacturing, mining, and electricity has significantly declined in March this year.

      On a fiscal year basis, the average industrial production growth for the financial year 2024–25 has decreased to 4%. This is notably lower than the 5.90% recorded in the 2023–24 financial year.

பயோகேஸ் துறைக்கு ரூ.200 கோடியில் ஒப்பந்தம்

ஏப் 28, 2025 12:01 PM

      சென்னை:சென்னையில் நடந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ‘ரினியூ எக்ஸ் 2025’ கண்காட்சி வாயிலாக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைப்பான ஐ.பி.ஏ., தெரிவித்துள்ளது.

      இன்பார்மா மார்க்கெட்ஸ் சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ரினியூ எக்ஸ் 2025 என்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடந்தது. இந்நிகழ்வில் உயிரி ஆற்றல், சூரிய சக்தி, காற்றாலை, ஆற்றல் சேமிப்பு மற்றும் மேலாண்மை துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்கள் பங்கேற்ற விவாதங்கள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

     இதன் வாயிலாக, பயோகேஸ் துறைக்கு 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கிடைத்து உள்ளதாக தொழில்துறை அமைப்பான ஐ.பி.ஏ., எனப்படும் இந்திய பயோகேஸ் சங்கம் தெரிவித்து உள்ளது.

₹200 Crore Investment Agreements Signed for Biogas Sector

April 28, 2025 – 12:01 PM

     Chennai: Through the RenewX 2025 exhibition on renewable energy held in Chennai, investment agreements worth ₹200 crore have been secured, according to the Indian Biogas Association (IBA).

     The three-day RenewX 2025 exhibition and conference on renewable energy was organized by Informa Markets at Nandambakkam, Chennai. The event featured stakeholders from sectors such as bioenergy, solar power, wind energy, and energy storage and management, who participated in discussions and seminars.

      As a result of the event, various Memorandums of Understanding (MoUs) amounting to over ₹200 crore have been signed for the biogas sector, the IBA stated.

சென்னையில்இந்தோதைவான்தொழில் பூங்காவுக்கு ஒப்பந்தம் 

 ஏப் 27, 2025 01:14 PM

      சென்னை:சென்னைக்கு அருகில், ‘இந்தோ – தைவான்’ தொழில் பூங்கா அமைப்பதற்காக, தமிழக அரசின், ‘கெய்டன்ஸ்’ நிறுவனம் மற்றும் தைவான் வர்த்தக கூட்டமைப்பு இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

      தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ், காலணி போன்ற துறைகளில் தொழில் துவங்குவதில், தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனங்களின் பங்கு அதிகம்.

      எனவே, தைவான் நாட்டு நிறுவனங்களுக்காக உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆலை அமைப்பதற்காக சர்வதேச தரத்தில், தைவானிய தொழில் பூங்காவை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது.

       இதற்கான அறிவிப்பை சட்டசபையில், தொழில் துறை அமைச்சர் ராஜா நேற்று முன்தினம் வெளியிட்டார்.

        இந்த பூங்கா, தைவான் நிறுவனங்களின் 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதை இலக்காக கொண்டிருக்கிறது. இதனால், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

      இதை தொடர்ந்து, சென்னைக்கு அருகில், ‘இந்தோ – தைவான்’ தொழில் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசின், ‘கெய்டன்ஸ்’ எனப்படும் வழிகாட்டி நிறுவனம், தைவான் வர்த்தக கூட்டமைப்பு இடையில், சென்னையில் அமைச்சர் ராஜா முன்னிலையில் கையெழுத்தானது.

      முதல் கட்டமாக இந்த பூங்கா, 1,800 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

Agreement Signed for ‘Indo-Taiwan’ Industrial Park near Chennai

April 27, 2025 – 1:14 PM

      Chennai: An MoU (Memorandum of Understanding) was signed yesterday between the Tamil Nadu government’s Guidance Corporation and the Taiwan External Trade Development Council to establish an ‘Indo-Taiwan’ Industrial Park near Chennai.

     Taiwanese companies have shown a growing interest in starting businesses in Tamil Nadu, especially in sectors such as electronics and footwear.

     To support these companies, the Tamil Nadu government has decided to set up a Taiwan-style industrial park of international standards, specifically aimed at housing component manufacturing units that cater to Taiwanese firms.

      This announcement was made in the state assembly two days ago by Minister for Industries, Mr. Rajaa.

      The park aims to attract investments worth ₹10,000 crore from Taiwanese companies and is expected to generate employment for around 20,000 people.

      Following this, the MoU to set up the Indo-Taiwan Industrial Park near Chennai was officially signed in the presence of Minister Rajaa by the Guidance Corporation and the Taiwan External Trade Development Council.

      In the first phase, the park is expected to attract investments of ₹1,800 crore and create job opportunities for 5,000 people.

சி.எஸ்.ஆர்., நிதி செலவிடுவதில் கம்பெனிகளுக்கு புது உத்தரவு

 ஏப் 26, 2025 12:36 PM

     சென்னை:நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதியை, கலெக்டர் வாயிலாக செலவிட, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

சட்டசபையில் அவர் வெளியிட்ட தகவல்:

      தொழில் நிறுவனங்கள் அவர்களது சி.எஸ்.ஆர்., நிதியில், நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, ஏற்கனவே அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     பெரும்பாலும் நிறுவனங்கள் நேரடியாக பள்ளிகள், மருத்துவமனைகள் சி.எஸ்.ஆர்., நிதியில் உதவி செய்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு சி.எஸ்.ஆர்., போய் சேர்ந்தால், மக்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.

     எனவே தான், இனி கலெக்டர் வாயிலாக சி.எஸ்.ஆர்., நிதியை செலவிட வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்திஉள்ளோம்.

இவ்வாறு கூறினார்.

 

New Directive for Companies on CSR Fund Spending

April 26, 2025, 12:36 PM


     Chennai: Companies have been instructed to spend their Corporate Social Responsibility (CSR) funds through the District Collector, according to Minister of Industries Mr. Raja.

    In the State Assembly, he shared the following information:

     The government has already informed companies that they should implement welfare schemes in areas surrounding their establishments using their CSR funds.

      Usually, companies provide direct support to schools and hospitals through their CSR contributions. However, if elected representatives are involved in the distribution of CSR funds, the public can receive greater benefits.

      Hence, we have now instructed companies to spend their CSR funds through the District Collector.

    This is what the minister stated.

தமிழக அரசின் தொழில் தரவு தளத்துக்காக 17 லட்சம் நிறுவன விபரங்கள் சேகரிப்பு

 ஏப் 25, 2025 11:49 PM

        சென்னை:தொழில்களுக்கு உதவ, தமிழக அரசின், ‘பேம் டி.என்’ நிறுவனம், தொழில் தரவு தளத்தை உருவாக்குகிறது. இதுவரை, அரசு துறைகள் வாயிலாக, 17 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

      எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை நிறுவனங்கள் உள்ளன, அவை என்னென்ன பொருட்களை உற்பத்தி செய்கின்றன என்பது தொடர்பான துல்லிய விபரங்கள், அரசிடம் இல்லை. எனவே, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும், ‘பேம் டி.என்’ நிறுவனம், தொழில் நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய தமிழக தொழில் தரவு தளத்தை உருவாக்கி வருகிறது.

       இதற்காக, மின்சார வாரியம், வணிக வரி, உள்ளாட்சி அமைப்புகள், சிப்காட், சிட்கோ உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளிடம் இருந்து, பதிவு செய்துள்ள நிறுவனங்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது.

      கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய இந்த பணியில் இதுவரை, 12 துறைகளில் இருந்து, 17 லட்சம் நிறுவனங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

      அதில், 5.82 லட்சம் நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளின் மானிய சலுகை கிடைக்க உதவும், ‘உத்யம்’ தளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்ற நிறுவனங்களையும் பதிவு செய்யும் பணி நடக்கிறது.

 

Collection of 1.7 Million Company Records for Tamil Nadu Government’s Industrial Database

April 25, 2025 – 11:49 PM

      Chennai: To support businesses, the Tamil Nadu government’s “Facilitation for Enterprise Management Tamil Nadu” (FaMe TN) is developing an industrial database. So far, details of 1.7 million Micro, Small, and Medium Enterprises (MSMEs) have been collected through various government departments.

     The government currently lacks accurate data on how many companies exist in each district and what products they manufacture. To address this, FaMe TN, operating under the Tamil Nadu MSME department, is building a comprehensive industrial database for the state.

     For this initiative, information is being gathered from multiple government bodies and departments such as the Tamil Nadu Electricity Board, Commercial Tax Department, Local Bodies, SIPCOT, and SIDCO, based on registered companies.

     Launched at the end of last year, this effort has so far collected data from 12 departments, covering 1.7 million companies.

     Among them, efforts have been made to register 5.82 lakh companies on the central government’s “Udyam” portal, which helps businesses avail subsidies and schemes from both central and state governments. Work is ongoing to register the remaining companies as well.

எட்டு மாத உச்சத்தில் தனியார் துறை வளர்ச்சி

ஏப் 24, 2025 01:01 PM

     புதுடில்லி:நாட்டின் தனியார் துறை வளர்ச்சி, எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இம்மாதம் அதிகரித்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     மாதந்தோறும் வெளியிடப்படும் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டில், இம்மாதத்துக்கான தரவுகளில் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு 60 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

      கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு, இதுவே அதிகபட்ச கூட்டு வளர்ச்சியாகும். கடந்த மாதம் இது 59.50 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்தால் வளர்ச்சியைக் குறிக்கும்.

       அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ள நிலையில், தயாரிப்பு துறை நிறுவனங்களின் வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது

       சேவைகள் துறை நிறுவனங்களின் புதிய ஆர்டர்களும் இம்மாதம் அதிகரித்துள்ளன.

Private Sector Growth at Eight-Month High

Apr 24, 2025 | 01:01 PM

     New Delhi – Growth in the country’s private sector has reached its highest level in eight months, according to a survey by HSBC Bank.

     The Flash PMI (Purchasing Managers’ Index), which is released monthly, showed that the composite PMI rose to 60 points this month.

      This marks the highest overall growth since August last year. It is noteworthy that the index was at 59.5 points last month. An index above 50 indicates expansion.

     It has been reported that foreign orders for manufacturing sector companies have increased, following US President Trump’s decision to pause reciprocal tariffs for 90 days.

     New orders in the services sector have also increased this month.

பாதுகாப்பு துறையில் தொழில் வாய்ப்புகள்

ஏப் 23, 2025 11:39 PM

    சென்னை:ராணுவ அமைச்சகத்தின் கீழ், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு செயல்படுகிறது. இது, நாட்டின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அதிநவீன ஆயுத அமைப்புகள், ராணுவ தொழில்நுட்பங்கள், உபகரணங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

      இதற்காக தேவைப்படும் சாதனங்களை தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் இருந்து டி.ஆர்.டி.ஓ., கொள்முதல் செய்வதற்கு உதவும் நடவடிக்கையில், ‘டிட்கோ’ எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

       அதன்படி, டிட்கோ, தமிழக வான்வெளி தொழில் மேம்பாட்டு சங்கத்துடன் இணைந்து, சென்னையில் வரும், 26ம் தேதி, டி.ஆர்.டி.ஓ., பாதுகாப்பு மாநாடு – தமிழகம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

      இதில், டி.ஆர்.டி.ஓ., தலைவர் மற்றும் டைரக்டர் ஜெனரல்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். பல்வேறு தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. டி.ஆர்.டி.ஓ.,வில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து, அதன் அதிகாரிகள் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிப்பர். அதற்கு ஏற்ப, பொருட்களை தயாரித்து, நிறுவனங்களும் தொழில் வாய்ப்பை பெற முடியும்.

Career Opportunities in the Defense Sector

April 23, 2025, 11:39 PM –

      Chennai: Under the Ministry of Defence, the Defence Research and Development Organisation (DRDO) operates to meet the country’s defense needs. DRDO undertakes the development of advanced weapons systems, military technologies, and equipment within India.

To facilitate the procurement of the necessary components from industries in Tamil Nadu, the Tamil Nadu Industrial Development Corporation (TIDCO), a state-run organization, is assisting in the process.

      Accordingly, in collaboration with the Tamil Nadu Aerospace & Defence Industrial Development Corporation, TIDCO is organizing a “DRDO Defence Conference – Tamil Nadu” in Chennai on the 26th of this month.

      DRDO’s Chairman, Director Generals, and other high-ranking officials will participate in the event, along with representatives from various industrial companies. DRDO officials will share information on business opportunities within the organization. Based on this, industries can manufacture the required components and thereby gain business opportunities with DRDO.

வாகன ஏற்றுமதி 19 சதவிகிதம் அதிகரிப்பு

ஏப் 21, 2025 12:57 PM

       புதுடில்லி:கடந்த 2025ம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்து 53 லட்சத்தை தாண்டியுள்ளதாக சியாம் தெரிவித்து உள்ளது.

      இதுகுறித்து சியாம் எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருப்பதாவது:

        வெளிநாட்டு சந்தைகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பயணியர் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களுக்கான தேவை வலுவாக இருந்ததன் காரணமாக, இந்தியாவின் வாகனங்கள் ஏற்றுமதி 2025ம் நிதியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து 53.63 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய நிதியாண்டான 2023 – 24ல், 45 லட்சமாக இருந்தது.

      இந்தியாவின் உற்பத்தி தரம் மேம்பட்டு வருவதால், சில நிறுவனங்கள் வளர்ந்த சந்தைகளுக்கும் வாகனங்களை ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளன. புதிய மாடல்கள் மற்றும் புதிய சந்தைகள், இரு சக்கர வாகன ஏற்றுமதிக்கான தடத்தை விரிவுபடுத்த உதவியுள்ளன.

 

Vehicle Exports Increase by 19%

April 21, 2025 – 12:57 PM

      New Delhi: Vehicle exports crossed 5.3 million units in the 2025 financial year, marking a 19% increase, according to SIAM (Society of Indian Automobile Manufacturers).

     SIAM stated:
Due to strong demand in foreign markets for passenger vehicles, two-wheelers, and commercial vehicles manufactured in India, vehicle exports rose by 19% in the 2025 financial year, reaching 5.363 million units. This figure stood at 4.5 million units in the previous financial year, 2023–24.

      With the improving quality of Indian manufacturing, some companies have also started exporting vehicles to developed markets. New models and emerging markets have helped expand the scope of two-wheeler exports.

சிப்காட் பூங்காவில் தயார் நிலை தொழிற்கூடம்

 ஏப் 20, 2025 12:43 PM

      சென்னை:தமிழக அரசின் சிப்காட் நிறுவனம், பெரிய தொழில் நிறுவனங்கள் ஆலை அமைக்க பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழில் பூங்காக்களை அமைக்கிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 2,622 ஏக்கரில் தொழில் பூங்கா உள்ளது.

     சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவவும், அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும், பெருந்துறை தொழில் பூங்காவில், 5 ஏக்கரில் பயன்பாட்டு கட்டடம் உட்பட, 49,794 சதுர அடியில், ‘பிளக் அண்டு பிளே’ எனப்படும் தயார் நிலை தொழிற்கூடத்தை சிப்காட் அமைத்துள்ளது.

      இதுவே, சிப்காட்டின் முதல் தயார் நிலை தொழிற்கூடம். இதை, தொழில் நிறுவனங்களுக்கு வாடகை விடும் பணியில் சிப்காட் ஈடுபட்டுள்ளது.

Ready-Built Industrial Facility in SIPCOT Park

April 20, 2025 – 12:43 PM

        Chennai: The Tamil Nadu government’s SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) is establishing industrial parks with various infrastructure facilities to attract large-scale industries. Accordingly, an industrial park has been developed on 2,622 acres in Perundurai, Erode district.

      To support small, micro, and medium enterprises and promote the export of their products, SIPCOT has constructed a ready-built industrial facility, known as a “Plug and Play” unit, within the Perundurai Industrial Park. This facility spans 49,794 square feet on 5 acres and includes a utility building.

       This is SIPCOT’s first ready-built industrial facility, and the organization is now involved in leasing it out to industrial companies.

யு.பி.., பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி., கிடையாது

ஏப் 19, 2025 11:07 PM

      புதுடில்லி:யு.பி.ஐ., வாயிலாக மேற்கொள்ளப்படும் 2,000 ரூபாய்க்கு கூடுதலான பரிவர்த்தனைகளுக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்கும் திட்டம் ஏதும் இல்லை என, மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

       ஜி.எஸ்.டி., வசூலிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும், ஆதாரமற்றது என்றும் நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. தற்போதைக்கு, அரசு இதுகுறித்து பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

      யு.பி.ஐ., வாயிலாக ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்; இதன் ஒரு பகுதியாக கடந்த 2021 – 22ம் நிதியாண்டு முதல் குறைந்த மதிப்பிலான யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு, வர்த்தகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No GST on UPI Transactions

April 19, 2025, 11:07 PM

    New Delhi: The Union Finance Ministry has clarified that there is no plan to levy GST on UPI transactions exceeding ₹2,000.

      This clarification comes in response to reports suggesting that the government is considering imposing GST on such transactions. The ministry dismissed these reports as baseless and untrue, stating that no such proposal is currently under consideration.

      The government emphasized that it continues to promote cashless transactions through UPI and noted that, as part of this effort, a scheme has been in place since the financial year 2021–22 to provide incentives to merchants for accepting low-value UPI transactions.

தொழில் உற்பத்தி தரவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும்

ஏப் 18, 2025 12:00 PM

      புதுடில்லி:தொழில்துறை உற்பத்தி குறித்த தரவுகள், இனி ஒவ்வொரு மாதமும் 28ம் தேதி வெளியிடப்படும் என மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி தரவுகள், 42 நாட்கள், அதாவது ஆறு வாரங்களுக்கு பிறகே வெளியிடப்படுகிறது. புதிய நடைமுறையில் இது 28 நாட்களாக குறைகிறது.

      இதன்படி, இம்மாதம் முதல், 28ம் தேதி மாலை 4:00 மணிக்கு தரவுகள் வெளியிடப்படும்; 28 அன்று விடுமுறை தினமாக இருந்தால், அடுத்த வேலை நாளில் வெளியிடப்படும்.

       பொருளாதார தரவுகள் வெளியிடப்படுவதற்கு ஆகும் நேரத்தை குறைப்பதற்கு அமைச்சகம் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும்; இதன் ஒரு பகுதியாக, தற்போது தொழில்துறை உற்பத்தி குறித்த தரவுகளை, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Industrial Production Data to Be Released in Advance

April 18, 2025 – 12:00 PM

        New Delhi: The Ministry of Statistics and Programme Implementation has announced that industrial production data will now be released on the 28th of every month. Currently, the data for a given month is released after 42 days, or about six weeks. Under the new system, this time frame will be reduced to 28 days.

       Accordingly, starting this month, the data will be released at 4:00 PM on the 28th. If the 28th falls on a holiday, the data will be released on the next working day.

      The ministry stated that it has been making continuous efforts to reduce the time taken to release economic data. As part of this effort, steps have been taken to release industrial production data two weeks earlier than before.

ரூ.100 கோடி முதலீடு திரட்டிய சென்னை ட்ரோன் ஸ்டார்ட் அப்

 ஏப் 17, 2025 11:47 PM

       சென்னை:சென்னையை சேர்ந்த ‘கருடா ஏரோஸ்பேஸ்’ என்ற ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனம், நிதி திரட்டல் இரண்டாம் சுற்றில், 100 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளது. புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் இந்நிறுவனம், இதுவரை இரண்டு சுற்றுகளில், 160 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின் மதிப்பு, 2,134 கோடி ரூபாயாக உள்ளது.

      இந்த முதலீட்டை பயன்படுத்தி, உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துவது, நவீன ராணுவ ட்ரோன் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ட்ரோன் உதிரி பாகங்கள் மற்றும் இதர அமைப்புகளை உற்பத்தி செய்ய, 35,000 சதுர அடி பரப்பளவில், புதிய ஆலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 24,000 சதுர அடி பரப்பளவில், உற்பத்தி ஆலை செயல்பாட்டில் உள்ளது.

       இந்நிறுவனம் லாபகரமாக இயங்கி வருவதாகவும், கடந்த நிதியாண்டில், 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாகவும் இந்நிறுவன நிறுவனர் அக்னீஷ்வர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

        அரசு, விவசாயம் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், ராணுவ தேவைகள் உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் சேவைகளை வழங்குகிறது இந்நிறுவனம்.

Chennai Drone Startup Raises ₹100 Crore in Funding

April 17, 2025 – 11:47 PM

     Chennai: Chennai-based drone startup Garuda Aerospace has raised ₹100 crore in its second round of funding. The company, which is preparing for a new equity issuance, has so far secured a total of ₹160 crore across two funding rounds. The current valuation of the company stands at ₹2,134 crore.

     The funds will be used to expand its manufacturing facility, and for research, development, and testing of advanced military drones. In particular, the company plans to set up a new 35,000 sq. ft. facility for the production of drone spare parts and related components. At present, the company operates a 24,000 sq. ft. manufacturing facility.

     Founder Agnishwar Jayaprakash stated that the company is operating profitably and generated ₹120 crore in revenue in the last financial year.

     The company offers services across various sectors including government, agriculture, construction, and defense.

கார் விற்பனையில் அதிகரிக்கும் எஸ்.யு.வி., – எம்.பி.வி., மாடல்கள்

 ஏப் 16, 2025 11:29 PM

       புதுடில்லி:சியாம் என்ற இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம், 2024 – 25ம் நிதியாண்டுக்கான வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், பயணியர் கார்களின் விற்பனை, 2 சதவீதம் உயர்ந்து, வரலாறு காணாத அளவில் 43 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

      பயணியர் கார்களின் மொத்த விற்பனையில், 65 சதவீதம் எஸ்.யூ.வி., எம்.பி.வி., கார்கள் பங்கு வகிக்கின்றன. இது, 2023 – 24 நிதியாண்டை விட, 5 சதவீதம் உயர்வு.

       உலகளவில் இந்திய வாகன ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது: இந்தியாவின் போட்டித்தன்மை அதிகரித்துள்ளது. நிலையான கொள்கை, தனிநபர் வருமான வரியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு போன்ற சமீபத்திய நடவடிக்கைகள், நுகர்வோர் நம்பிக்கை மற்றும் வாகன தேவையை அதிகரிக்க உதவும்.

– சைலேஷ் சந்திரா
இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்.

Increase in SUV, MPV models in car sales

April 16, 2025, 11:29 PM

      New Delhi: The Society of Indian Automobile Manufacturers (SIAM) has released the vehicle sales report for the 2024-25 fiscal year. The passenger car sales have increased by 2%, with a record 4.3 million cars sold.

       In the total passenger car sales, 65% of the share is held by SUVs and MPVs. This is a 5% increase compared to the 2023-24 fiscal year.

       Indian vehicle exports have received a warm reception globally: India’s competitiveness has increased. Recent measures such as consistent policies, personal income tax reforms, and the Reserve Bank’s interest rate cuts have helped boost consumer confidence and increased vehicle demand.

  • SAILESH CHANDRA
    President of the Society of Indian Automobile Manufacturers

 

6 லட்சம் லாரிகள் ஓடவில்லை: கர்நாடகா ஸ்தம்பிக்கிறது

 ஏப் 15, 2025 01:37 PM

      பெங்களூரு: டீசல் விலை உயர்வு. சுங்கசாவடி கட்டண அதிகரிப்பு மற்றும் அடிப்படை கூலி விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கர்நாடகாவில் இன்று லாரி ஸ்டிரைக் நடக்கிறது. சுமார் 6 லட்சம் லாரிகள் ஓடாததால் மாநிலம் முழுவதும் பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கர்நாடக லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இந்த ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

         இந்த போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் முழு ஆதரவு கிட்டியுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் லாரி மூலம் செல்லும் தண்ணீர் விநியோகம். சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை, அடியோடு நிறுத்தப்பட்டதால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஜீன்ஸ் உள்பட ஆயத்த ஆடைகள் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

       ஸ்டிரைக் தொடரும் பட்சத்தில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அரசு தரப்பில் இன்று பேச்சு நடக்கிறது. இதில் முடிவுகள் எட்டாத பட்சத்தில் மாநிலத்தில் நிலைமை சீராகாது. பல்வேறு பொருட்களில் விலையும் எகிறக்கூடும். தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு அளித்திருப்பதால் லாரி ஸ்டிரைக்கால் தமிழக கர்நாடக இடையே செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

6 Lakh Trucks Halted: Karnataka Grinds to a Standstill

April 15, 2025 – 01:37 PM

         Bengaluru: A statewide truck strike is underway in Karnataka today, triggered by several issues including the rising price of diesel, increased toll charges, and demands for revision of base freight rates. With nearly 6 lakh trucks off the roads, essential services across the state have been severely disrupted. The strike has been called by the Federation of Karnataka Lorry Owners’ Associations.

       The protest has received widespread support throughout the state. Due to the strike, distribution of water through tankers and supply of cooking gas cylinders has come to a complete halt, severely affecting high-rise residential buildings and several companies. Garment factories, including those manufacturing jeans, have also shut down operations.

       As the strike continues, the disruptions are expected to intensify. The government is holding talks today with representatives from the truck owners’ associations in an effort to reach a resolution. If no agreement is reached, the situation in the state may further deteriorate, and the prices of various goods may rise.

        Truck owners’ associations from Tamil Nadu have also extended their support to the strike, resulting in disrupted transport between Tamil Nadu and Karnataka.

தமிழகத்தில் தொழிற்பூங்கா அமைக்கிறதுஒன் ஆல்பா

ஏப் 13, 2025 12:51 PM

      சென்னை:புதிதாக துவங்கப்பட்டுள்ள ‘ஒன் ஆல்பா வெஞ்சர்ஸ்’ நிறுவனம், தமிழகத்தில் தொழில் பூங்கா அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீ கைலாஸ்’ குழுமத்தின் ஆதரவோடு துவங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

      முதற்கட்டமாக, சென்னையை அடுத்த ஒரகடத்தில் 12 லட்சம் சதுர அடியில் தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க உள்ளதாக, ஒன் ஆல்பா வெஞ்சர்ஸ் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக அமைக்கப்படவுள்ள இந்த பூங்காவின் வாயிலாக, மாநிலத்தின் வாகனம், மின்னணுவியல் மற்றும் அதன் துணை பிரிவுகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      முதற்கட்டமாக 6 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த ஓர் ஆண்டுக்குள் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கால நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, வணிகத்தை துவங்குவதற்கு தயார் நிலையில் உள்ள வகையில், இந்த தொழில் பூங்கா அமைக்கப்படும் என, ஒன் ஆல்பா தெரிவித்துள்ளது.

‘One Alpha’ to Set Up Industrial Park in Tamil Nadu

April 13, 2025 | 12:51 PM

        Chennai: Newly launched company One Alpha Ventures has announced its plan to establish an industrial park in Tamil Nadu. The company, which has been launched with the support of Kerala-based Sree Kailas Group, stated that it will focus on industrial and logistics infrastructure.

      As part of the first phase, One Alpha Ventures will set up an industrial and logistics park on 1.2 million square feet of land in Oragadam, near Chennai. The park will be developed in two phases, and the company stated that it aims to leverage opportunities in the automotive, electronics, and allied sectors within the state.

       In the first phase, construction work will be completed on 600,000 square feet, and operations are scheduled to begin by March next year. The second phase is expected to be completed within a year after that. One Alpha also mentioned that the industrial park will be designed to be business-ready, keeping in mind the needs of modern enterprises.

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 2.90 சதவீதமாக குறைந்தது

ஏப் 12, 2025 01:04 PM

       புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த பிப்ரவரியில் 2.90 சதவீதமாக குறைந்துள்ளது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

      தயாரிப்பு துறை, சுரங்கம் மற்றும் மின்சாரத்துறை சார்ந்த உற்பத்தி சரிந்ததே இதற்கு காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 5.20 சதவீதமாகவும், 2024 பிப்ரவரியில் தொழில் துறை உற்பத்தி குறியீடு 5.60 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

       ஒட்டுமொத்தமாக, கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில், சராசரி தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4.10 சதவீதமாக உள்ளது. இது, 2023 — 24 நிதியாண்டின் இதே காலத்தில் 6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Industrial Production Growth Falls to 2.90%

April 12, 2025 – 01:04 PM

         New Delhi: The country’s industrial production growth has declined to 2.90% in February, marking the lowest in six months, according to the National Statistical Office.

       The drop has been attributed to a decline in output from the manufacturing sector, mining, and electricity industries. In comparison, industrial production growth was 5.20% in January and stood at 5.60% in February 2024.

        Overall, the average industrial production growth for the 11-month period from April to February in the last financial year was 4.10%, a notable drop from the 6% recorded during the same period in the 2023–24 financial year.

ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிக நிம்மதி

ஏப் 11, 2025 11:18 AM

      புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது, இந்திய ஏற்றுமதியாளர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

      இந்த முடிவு, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்துவதற்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

       கடந்த வாரம், உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருந்த டிரம்ப், இது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

     முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி முதல், அனைத்து நாடுகளின் மீதும் 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்படும் என்றும்; இதன் பிறகு 9ம் தேதி முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்திருந்தார்.

      நேற்று முன்தினம், முதல் பரஸ்பர வரி விதிப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வரவிருந்த நிலையில், சீனா தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்பையும் அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.

      இந்த காலகட்டத்தில் மற்ற நாடுகளின் இறக்குமதிகள் மீது 10 சதவீத அடிப்படை வரி மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

      இந்த முடிவை வரவேற்றுள்ள அவர்கள், பொருளாதார பாதிப்பை தவிர்க்கவும், வர்த்தக ரீதியான பேச்சுகளை நடத்தவும் இது உதவும் என தெரிவித்துள்ளனர்.

      மேலும், சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையேயான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் விரைவாக இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Temporary Relief for Exporters

Apr 11, 2025 – 11:18 AM

      New Delhi:
U.S. President Donald Trump has announced a 90-day suspension on reciprocal tariffs, bringing a sense of relief among Indian exporters.

      They expressed hope that this decision would offer a better opportunity for trade agreement negotiations between the two countries. Last week, Trump had announced reciprocal tariffs on countries around the world, stating that it would be implemented in two phases.

      As part of the first phase, a 10% base tariff was imposed on all countries starting April 6. The second phase was scheduled to come into full effect from April 9.

      However, just two days ago, when the first round of reciprocal tariffs was set to be fully implemented, Trump announced that tariffs on all countries—except China—would be suspended for the next 90 days.

      During this period, only a 10% base tariff will be collected on imports from other countries, he stated.

      Trump’s announcement has brought relief to Indian exporters.
Welcoming the decision, they said it would help avoid economic damage and facilitate trade negotiations.

     They also stated that in a recent meeting, India’s Union Commerce Minister Piyush Goyal assured that a bilateral trade agreement between India and the U.S. would be finalized soon.

ரூ.1,000 கோடியில் லேப்டாப் ஆலை தமிழக அரசுடன்டிக்ஸன்ஒப்பந்தம் 5,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

ஏப் 10, 2025 12:23 PM

     சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள இன்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் லேப்டாப், ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு,  தமிழக அரசுடன் டிக்ஸன் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

     கடந்த 1993ம் ஆண்டு துவங்கப்பட்ட டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம், மின்னணு நுகர்பொருட்கள், விளக்குகள், மொபைல்போன் சந்தைகளுக்கான மின்னணு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.

    சாம்சங், ஷாவ்மி, மோட்டரோலா, போட், பனாசோனிக், டி.சி.எல்., ஒன் பிளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.

       ஒரகடத்தில் ஆலை அமைக்க, தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், டிக்ஸன் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

       இதன் வாயிலாக, காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Dixon Signs Agreement with Tamil Nadu Government for ₹1,000 Crore Laptop Factory – 5,000 Jobs to be Created

April 10, 2025 | 12:23 PM  

      Chennai: Dixon Technologies Limited has signed a Memorandum of Understanding (MoU) with the Tamil Nadu government to set up an electronics manufacturing plant in the IndoSpace Industrial Park located in Oragadam, Kanchipuram district. With an investment of ₹1,000 crore, the factory will produce laptops, all-in-one computers, and other electronic items, creating job opportunities for around 5,000 people.

     Founded in 1993, Dixon Technologies manufactures consumer electronics, lighting products, and electronic goods for the mobile phone market. The company produces items on a contract basis for major brands such as Samsung, Xiaomi, Motorola, boAt, Panasonic, TCL, and OnePlus.

      The MoU was signed in the presence of Tamil Nadu Chief Minister M.K. Stalin between Dixon Technologies and the state’s industrial guidance agency. This initiative is expected to generate employment opportunities for youth in and around Kanchipuram.

எத்தனால் இறக்குமதிக்கு தடை இந்தியா மீது அமெரிக்கா புகார்

 ஏப் 09, 2025 11:30 PM

       வாஷிங்டன்:எத்தனாலை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்திருப்பதால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக, அந்நாட்டு வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

       அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு, 2025ம் ஆண்டுக்கான தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

       முக்கிய வர்த்தக கூட்டாளிகளான இந்தியா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவை நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், இவை அமெரிக்காவின் வர்த்தகத்தை சிதைப்பதுடன், அமெரிக்க உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதில் குற்றம்சாட்டி உள்ளது.

    மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

      எரிபொருளுடன் எத்தனால் கலப்பை அடைய இலக்கு நிர்ணயித்துள்ள போதும், எரிபொருள் பயன்பாடுக்கான எத்தனால் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

தாய்லாந்தும் இதே போன்ற காரணங்களுக்காக, கடந்த 2005 முதல் இறக்குமதி உரிமத்துக்கு அனுமதி அளிப்பதில்லை.

      இந்தியா மற்றும் தாய்லாந்து சந்தைகள் அமெரிக்க எத்தனாலை அனுமதித்தால், ஆண்டுக்கு 3,519 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும்.

     இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

US Alleges India Over Ethanol Import Ban

April 09, 2025, 11:30 PM

      Washington: The United States Trade Representative (USTR) has alleged that India’s ban on ethanol imports is adversely affecting American exporters.

        The USTR released its 2025 National Trade Estimate Report, which highlights concerns over trade practices among key partners including India, China, Japan, and the European Union. The report accuses these countries of engaging in unfair trade practices that harm U.S. trade interests, and negatively impact American manufacturers, exporters, and workers.

     The report further states:

     Despite setting targets for blending ethanol with fuel, India has imposed a ban on the import of ethanol for fuel use. Similarly, Thailand has not permitted import licenses for ethanol since 2005, citing similar reasons.

      According to the report, if India and Thailand were to open their markets to U.S. ethanol, American exports could increase by up to ₹3,519 crore (approx. USD 420 million) annually.

     So reads the statement in the report.

ரூ.2,210 கோடி ஒப்பந்தம் பெற்றதுபெல்

ஏப் 08, 2025 11:56 PM

        பெங்களூரு:ராணுவ அமைச்சகம், 2,210 கோடி ரூபாய் மதிப்பில், எலக்ட்ரானிக் போர்க் கருவிகளை கொள்முதல் செய்ய, மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ என்ற ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

       விமானப்படையின் ‘எம்.ஐ., – 17வி5’ என்ற நடுத்தர ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களின் ஏவுகணை மற்றும் விமான எதிர்ப்பு திறனை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

       இந்த எலக்ட்ரானிக் போர்க்கருவிகளை ‘டி.ஆர்.டி.ஒ.,’ என்ற ‘ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு பிரிவான ‘போர் விமான அமைப்புகள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையம்’ உருவாக்கி உள்ளது. இதை, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

       ரேடார் எச்சரிக்கை கருவி, ஏவுகணை எச்சரிக்கை அமைப்பு மற்றும் எதிரி ஏவுகணைகளை திசை திருப்பும் அல்லது தாக்கி அழிக்கும் அமைப்பு ஆகியவை, இதில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

      இது, விமானப்படை ஹெலிகாப்டர்களின் போரிடும் திறனை மேம்படுத்தும்.

BEL Secures ₹2,210 Crore Contract

April 08, 2025, 11:56 PM

Bengaluru: The Ministry of Defence has signed a contract worth ₹2,210 crore with Bharat Electronics Limited (BEL), a central public sector enterprise, for the procurement of electronic warfare equipment.

       This contract aims to enhance the missile and anti-aircraft capabilities of the Indian Air Force’s medium-lift transport helicopters, specifically the ‘Mi-17V5’ models.

      The electronic warfare systems were developed by the Defence Research and Development Organisation (DRDO), specifically by its lab – the Centre for Airborne Systems (CABS). BEL will be responsible for manufacturing the equipment.

      The procurement includes radar warning receivers, missile warning systems, and countermeasure systems capable of diverting or neutralizing enemy missiles.

      This initiative is expected to significantly boost the combat effectiveness of the Indian Air Force’s helicopter fleet.

சீன பொருட்கள் குவிப்பு மீதான கண்காணிப்பை கடுமையாக்குகிறது இந்தியா

 ஏப் 07, 2025 11:50 PM

          புதுடில்லி:முக்கிய வர்த்தக கூட்டு நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிகளின் எதிரொலியால், சீனப் பொருட்களின் இறக்குமதி மீது மத்திய அரசு கண்காணிப்பை கடுமையாக்குகிறது. இது தொடர்பான உத்தியை வகுக்க வர்த்தக செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

         சமீபத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

      இது பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் மதிப்பு வரிகளை விதித்தது. 34 சதவீதம் என்ற அதிக வரி விதிப்பால், சீனா கடுமையாக பாதிப்புஅடைந்துள்ளது.
இது அமெரிக்காவுக்கான சீன இறக்குமதிகள் மீது ஏற்கனவே உள்ள 20 சதவீதத்துடன் இணைந்து, மொத்த வரி 54 சதவீதமாக உயர்கிறது.

India Tightens Monitoring on Influx of Chinese Goods

April 07, 2025 | 11:50 PM

       New Delhi: In response to the impact of tariffs imposed by the United States on key trading partners, the Indian government is tightening its monitoring of Chinese imports. Consultation meetings are being held under the leadership of the Commerce Secretary to formulate related directives.

       Recently, U.S. President Trump signed an executive order imposing new reciprocal tariffs.

      These tariffs apply an additional 10 to 50 percent value-based tax on goods imported into the United States from various countries. Among those affected, China has been significantly impacted by a high tariff rate of 34 percent.

      Combined with the already existing 20 percent tariff on Chinese imports to the U.S., the total tariff burden has now risen to 54 percent.

சென்னை அருகே ரூ 1000 கோடியில் கொரில்லா கண்ணாடி ஆலை.. அதென்ன கொரில்லா கண்ணாடி?

 ஏப் 05, 2025 07:04 AM

       சென்னை: சென்னை அருகே ரூ 1000 கோடியில் கொரில்லா கண்ணாடி தயாரிப்பு நிறுவனம் அடுத்த ஆண்டு அமையவுள்ளது. AD அமெரிக்காவை சேர்ந்த கார்னிங் எனும் நிறுவனம் ஆப்பிள் ஐபோனுக்கு பாதுகாப்பு கண்ணாடி தயாரித்து வருகிறது. இதற்கான ஆலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் அமையவுள்ளது.                  

                              பிளக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கார்ன் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வரும் ஸ்ரீபெரும்புதூரிலேயே கார்னிங் நிறுவனமும் அமையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடைபெறுகிறது. பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கர் இடத்தில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. இதன் மூலம் முதல்கட்டமாக 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் தரப்படும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பாதுகாப்பு கண்ணாடியை சப்ளை செய்யும் நிறுவனம் இந்தியாவில் அமைகிறதையே காட்டுகிறது. முன்னதாக தெலுங்கானாவில் செப்டம்பர் மாதம் இந்த நிறுவனம் அமைவதாக இருந்தது. ஆனால் தெலுங்கானாவை விட தமிழகத்திலேயே இந்த நிறுவனத்தை அமைக்க நிர்வாகத்தினர் விரும்பினர்களாம். தமிழகத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்திக்கான சூழல் உள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோனுக்கு இதர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழகத்தில் உள்ளது.

                                புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால் நிறுவனத்தை அமைக்க ஓராண்டு ஆகும் என தெரிகிறது. பாக்ஸ்கான், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பெரிய உற்பத்தியாளர்களுக்கு தமிழகம் தாய் வீடாக திகழ்கிறது. இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டவுடன் முதலில் 30 மில்லியன் எண்ணிக்கையில் கண்ணாடிகளை தயாரிக்கும்.

இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் கண்ணாடிகள் ஆப்பிள் ஐபோன், ஐபாடுகளுக்கு பாதுகாப்பு அம்சங்களாக திகழ்கின்றன. இவற்றை கீழே போட்டாலும் போனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இந்த நிறுவனம் இந்த கண்ணாடி மட்டுமல்லாமல் பீங்கானையும் உற்பத்தி செய்கிறது. இந்த கண்ணாடி அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டது. மெல்லிய தடிமன் கொண்டதாகும். கொரில்லா குரங்கை பயன்படுத்தி அதன் ரோமங்களை வைத்துதான் இந்த கண்ணாடிகள் தயாரிக்கப்படுவதாகவும் இதற்காக நிறைய கொரில்லாக்களை கொல்வதாகவும் தகவல்கள் வந்தன. இதை யாரும் நம்ப வேண்டாம். அயனி மாற்றம் அடைவதால்தான் அந்த கண்ணாடிகள் மிகவும் வலிமையானவைகளாக இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடந்தது.

₹1000 Crore Gorilla Glass Factory Near Chennai – What is Gorilla Glass?

April 05, 2025, 07:04 AM

Chennai: A ₹1000 crore Gorilla Glass manufacturing plant is set to be established near Chennai next year. The American company Corning Inc., which produces protective glass for Apple iPhones, is setting up this factory in Pillaipakkam, Sriperumbudur.

Corning Inc. will join other major electronics manufacturers like Flextronics and Foxconn, which are already operating in Sriperumbudur. A Memorandum of Understanding (MoU) for this project will be signed at the Investors’ Summit in January next year. The factory will be built on 25 acres of land in Pillaipakkam, providing employment to 300 people in its initial phase.

This development marks a significant step as Apple’s protective glass supplier will now have a base in India. Initially, Corning Inc. planned to set up the factory in Telangana in September. However, the management decided to establish it in Tamil Nadu instead, citing better infrastructure for electronic manufacturing. Tamil Nadu is already home to several companies that produce Apple iPhone components.

Once the MoU is signed, it is expected to take a year to set up the plant. Tamil Nadu is already a key manufacturing hub for Apple’s top suppliers, including Foxconn, Pegatron, and Tata Electronics. Once operational, the Corning facility will initially produce 30 million glass units per year.

The glass produced at this factory will be used for Apple iPhones and iPads, providing high durability and scratch resistance. Even if dropped, these screens prevent major damage to the device. In addition to Gorilla Glass, Corning also manufactures ceramic materials.

Gorilla Glass is highly durable, thin, and resistant to pressure. Some rumors falsely claimed that the glass is made using hair from gorillas, leading to the killing of many gorillas. However, this is completely false. The glass achieves its strength through a special ion-exchange process.

The agreement for this project was finalized under the leadership of Tamil Nadu Minister T.R.B. Raja.

பெங்களூரு  – சென்னை நெடுஞ்சாலையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி

ஏப் 03, 2025 07:05 PM

        புதுடில்லி; பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட 20க்கும் அதிகமான நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன், நாடு முழுதும், தற்போது, 32,500 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.

        இதை, நடப்பு நிதியாண்டிற்குள் 72,300 ஆக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

        எண்ணெய் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் மட்டும், 10,000 சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு கீழ் நாடு முழுதும், 25,852 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.

          உத்தர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பெரும்பாலான சார்ஜிங் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

         மின்சார வாகனங்களை ஊக்குவிக்க பி.எம்., – இ டிரைவ் திட்டத்தின் கீழ், 10,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், சார்ஜிங் நிலையங்களுக்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

         தற்போது, புதுடில்லி, கொச்சி விமான நிலையங்கள், டெல்லி – ஜெய்ப்பூர் – ஆக்ரா மற்றும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.

Funding for Charging Stations on Bengaluru-Chennai Highway.

April 03, 2025 – 07:05 PM

      New Delhi: The central government has planned to set up charging stations on more than 20 highways, including the Bengaluru-Chennai highway. Currently, there are 32,500 electric vehicle (EV) charging stations across the country. The target is to increase this number to 72,300 by the end of the current financial year.

      Oil companies alone set up 10,000 charging stations in the last financial year. These companies now operate a total of 25,852 charging stations across the country.

      The majority of charging stations are located in three states: Uttar Pradesh, Tamil Nadu, and Maharashtra.

       To promote electric vehicles, ₹10,900 crore was allocated under the PM-eDrive initiative, of which ₹2,000 crore was earmarked for charging stations.

      Currently, charging stations are available at airports in New Delhi and Kochi, as well as on highways such as Delhi-Jaipur-Agra and Chennai-Tiruchirappalli.

ரெனோ நிஸான் ஆலையை கையகப்படுத்தியது ரெனோ

ஏப் 02, 2025 01:13 PM

       சென்னை:’ரெனோ நிஸான்’ உற்பத்தி ஆலையில், நிஸான் நிறுவனம் வைத்துள்ள 51 சதவீத பங்குகளை, ரெனோ நிறுவனம் கையகப்படுத்த இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

       சென்னை ஒரகடம் தொழிற்பேட்டையில், ரெனோ – நிஸான் கூட்டணியில், 2008ல் கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. இந்த ஆலையில், ரெனோ நிறுவனம் 49 சதவீத பங்கையும், நிஸான் நிறுவனம் 51 சதவீத பங்கையும் வைத்திருந்தன. இந்நிலையில், நிதி நெருக்கடியின் காரணமாக, நிஸான் நிறுவன பங்குகளை, ரெனோ நிறுவனம் முழுமையாக கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

         இனிமேல், இந்த ஆலை ரெனோ நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டில் செயல்படும். கூட்டணி தொடர்வதால் நிஸான் கார்கள், ஆலையில் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும்.

Renault Acquires Nissan’s Stake in the Renault-Nissan Plant

April 02, 2025, 01:13 PM

Chennai: It has been officially announced that Renault is set to acquire Nissan’s 51% stake in the Renault-Nissan manufacturing plant.

The Renault-Nissan partnership established a car manufacturing plant in 2008 at Oragadam Industrial Estate in Chennai. In this joint venture, Renault held a 49% stake, while Nissan owned a 51% stake.

Due to financial difficulties, Nissan has decided to sell its stake, and Renault has announced that it will fully acquire Nissan’s shares.

From now on, the plant will operate entirely under Renault’s control. However, as the partnership continues, Nissan cars will continue to be produced at the facility.

பிரிட்டன் நிறுவனத்தை கையகப்படுத்திய டாடா

ஏப் 01, 2025 07:04 AM

         மும்பை; டாடா குழுமத்தின் ‘டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ்’ நிறுவனம், பிரிட்டனின் ‘ஆர்டிபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை, 827 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

         இதை, டாடா குழும நிறுவனமான, ஜாகுவார் லேண்ட்ரோவர் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் வாயிலாக கையகப்படுத்தியுள்ளது.

         இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சீட் ஆர்ம்ரெஸ்ட், கிளவ் பாக்ஸ் மற்றும் இதர உட்புற உபகரணங்களை உற்பத்தி செய்வதில் ஆர்டிபெக்ஸ் நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

         ஜாகுவார் லேண்ட்ரோவர், பி.எம்.டபிள்யூ., பெண்ட்லீ, டொயோட்டா உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

Tata Acquires British Company

April 01, 2025, 07:04 AM

         Mumbai: Tata Group’s Tata AutoComp Systems has announced that it has acquired an 80% stake in the British company Artefex Interior Systems for ₹827 crore.

         This acquisition has been made through Jaguar Land Rover Ventures, a subsidiary of the Tata Group.

         Artefex specializes in manufacturing interior components such as instrument panels, seat armrests, glove boxes, and other interior accessories.

         The company supplies luxury car manufacturers including Jaguar Land Rover, BMW, Bentley, and Toyota.

கேஷ்பேக் சலுகைகளை விரும்பும் இந்தியர்கள்

மார் 30, 2025 08:40 PM

            டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்திய தொழில்முறை பணியாளர்களில், பெரும்பாலானோர் பரிசுப்புள்ளி உள்ளிட்ட சலுகைகளை விரும்புவது தெரிய வந்துள்ளது.

         டிஜிட்டல் பரிவர்த்தனை உள்கட்டமைப்பு சேவையான யு.பி.ஐ., மேடை மூலம் கடன் வழங்கும் கிவி நிறுவனம், டிஜிட்டல் நுகர்வோர் நிறுவனம் யூனோமோருடன் இணைந்து, 21 முதல் 35 வயது கொண்ட இந்திய தொழில்முறை பணியாளர்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான ஆய்வு நடத்தியது.

         இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 77 சதவீதம் பேர் நிதி முடிவுகளை மேற்கொள்ளும் முன் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான பரிசுப்புள்ளிகளை ஆய்வு செய்வதாகவும், 50 சதவீதம் பேர் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக் சலுகைகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.             

          சிறிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பெரும்பாலானோர் யு.பி.ஐ., வசதியை நாடுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. எனினும், கிரெடிட் கார்டு அளிக்கும் வட்டி இல்லா காலத்தை விரும்புவதாகவும் கணிசமானோர் தெரிவித்துள்ளனர்.

Indians Who Love Cashback Offers

March 30, 2025, 08:40 PM

          As digital transactions continue to rise, it has been observed that a majority of Indian professionals prefer rewards such as cashback and loyalty points.

         Fintech company KreditBee, which provides loans through the UPI platform, collaborated with digital consumer platform UnoMore to conduct a study on digital transactions among Indian professionals aged 21 to 35.

         The study found that 77% of respondents review digital transaction-related reward points before making financial decisions, while 50% expect cashback offers on every transaction.

        The study also revealed that most individuals prefer UPI for small transactions. However, a significant number of respondents also favor the interest-free period offered by credit cards.

நிப்டி நெக்ஸ்ட் 50′ குறியீட்டில் ஹூண்டாய்

 மார் 29, 2025 10:06 AM

       மும்பை:தேசிய பங்குச் சந்தையில், நிப்டி நெக்ஸ்ட் 50, நிப்டி 100 மற்றும் நிப்டி 500 ஆகிய குறியீடுகளில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா பங்கு சேர்க்கப்பட்டு உள்ளது.

       நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்தாண்டு அக்.,22ம் தேதி, புதிய பங்கு வெளியீடு வாயிலாக, இந்திய சந்தைக்குள் நுழைந்தது. கடந்த மார்ச் 24 முதல், மும்பை பங்குச் சந்தையின் பி.எஸ்.இ.,500 உள்ளிட்ட குறியீடுகளில் சேர்க்கப்பட்டது.

        இது குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குநர் உன்சூ கிம் தெரிவித்ததாவது:

       பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான நாங்கள், அடுத்த முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளோம். இந்திய மூலதனச் சந்தை குறியீடுகளான நிப்டி நெக்ஸ்ட் 50 மற்றும் பி.எஸ்.இ.,500 ஆகியவற்றில் இடம்பெறுவது, ஹூண்டாய் இந்தியாவின் பங்குகள் சந்தையின் இருப்பு மற்றும் வலுவான நம்பகத்தன்மையுடன் இருப்பதை காட்டுகிறது.

Hyundai in ‘Nifty Next 50’ Index

Mar 29, 2025, 10:06 AM

       Mumbai: Hyundai Motor India has been included in the Nifty Next 50, Nifty 100, and Nifty 500 indices on the National Stock Exchange.

       The country’s third-largest car manufacturer, Hyundai Motor India, entered the Indian stock market through an initial public offering (IPO) on October 22 last year. Since March 24, it has also been included in indices such as the BSE 500 on the Bombay Stock Exchange.

       Regarding this, Hyundai Motor India’s Managing Director, Unsoo Kim, stated:

       “As a publicly listed company, we have reached another significant milestone. Being included in key Indian stock market indices such as Nifty Next 50 and BSE 500 demonstrates the stability and strong credibility of Hyundai India’s shares in the market.”

சிப் தயாரிப்பு சாதன ஏற்றுமதி கோவையில் இருந்து துவக்கம்

மார் 28, 2025 01:01 PM

     கோவை:நாட்டிலேயே முதல்முறையாக, கோவையில் இருந்து சிப் ஆலையில் பயன்படுத்தப்படும் ‘வெரோதெர்ம் பார்மிக் ஆசிட் ரீபுளோ’ எனப்படும் முக்கிய சாதனத்தின் ஏற்றுமதியை ‘யீல்டு இன்ஜினியரிங்’ நிறுவனம் துவங்கி உள்ளது.

            அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட யீல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்தாண்டு செப்டம்பரில், கோவை சூலுாரில் தனது தயாரிப்பு ஆலையை துவங்கியது. இந்நிலையில், சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சாதனத்தை உருவாக்கி, ஏற்றுமதியை துவங்கி உள்ளது. 

        செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் எச்.பி.எம்., எனப்படும் உயர் அலைவரிசை நினைவகம், அதிவேக கம்யூட்டிங் அப்ளிகேஷன் ஆகியவற்றுக்கான சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இந்த சாதனம், இந்தியாவில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட நவீன சிப் தயாரிப்பு சாதனம் ஆகும்.       

       இதுகுறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்ததாவது:

              யீல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் ஆலையில் இருந்து சிப் தயாரிப்பிற்காக முக்கிய சாதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முக்கியமான முன்னேற்றம் ஆகும்.

Chip Manufacturing Equipment Export Begins from Coimbatore

March 28, 2025 – 01:01 PM

         Coimbatore: For the first time in the country, the export of a crucial device called “Verotherm Formic Acid Reflow,” used in chip manufacturing, has been initiated by Yield Engineering Systems (YES) from Coimbatore.

        Yield Engineering Systems, headquartered in California, USA, launched its manufacturing facility in Sulur, Coimbatore, in September last year as part of its global customer service expansion plan. Now, the company has begun manufactureng and exporting equipment used in semiconductor chip production.

       This advanced chip manufacturing equipment, produced in India for the first time, is utilized in the production of high-performance memory (HPM) and ultra-fast computing applications, both of which are key components in artificial intelligence (AI) technology.

        Regarding this development, Krishnan, Secretary of the Ministry of Electronics and Information Technology, stated:

      “The export of key equipment for chip manufacturing from Yield Engineering Systems’ facility marks a significant advancement in India’s semiconductor industry.”

சிறுதொழில்களுக்கு பாக்கி நிறுவனங்களுக்கு புது உத்தரவு

 மார் 27, 2025 12:07 PM

            புதுடில்லி:சிறு, குறு நிறுவனங்களிடம் பொருட்கள் அல்லது சேவையை பெற்று, 45 நாட்களுக்கு மேலாக தொகையை நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள், கட்டாயம் அரையாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

             சிறு, குறு நிறுவனங்கள், நிலுவை தொடர்பாக, மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., சமாதான் தளத்தில், இதுவரை 97,000க்கும் அதிகமான விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன.

          இந்நிறுவனங்களுக்கு மொத்தம் 21,600 கோடி ரூபாய்க்கு கூடுதலான தொகை வர வேண்டியுள்ளது. நிலுவைத் தொகை திருப்பிச் செலுத்தாத பட்டியலில், மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும்.

            இந்நிலையில், சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து சரக்கு மற்றும் சேவைகளை பெறும் நிறுவனங்கள், 45 நாட்களுக்கு மேலாக அதற்கான கட்டணத்தை செலுத்தாதபட்சத்தில், மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம், அரையாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

            நிலுவைத் தொகை எவ்வளவு மற்றும் காலதாமதத்துக்கான காரணங்களை இதில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Order for Pending Payments to Small Businesses

March 27, 2025 – 12:07 PM

            New Delhi: The Central Government has issued a directive requiring companies that have procured goods or services from small and micro enterprises (SMEs) and have delayed payments beyond 45 days to mandatorily submit a half-yearly financial report.

          So far, more than 97,000 applications have been filed on the MSME Samadhan portal regarding pending payments. The total outstanding amount owed to these enterprises exceeds ₹21,600 crore. The list of defaulters includes public sector undertakings (PSUs) under both the Central and State Governments.

        As per the new directive, companies that procure goods and services from small and micro enterprises must submit a half-yearly financial report to the Ministry of Corporate Affairs (MCA) if they fail to clear payments within 45 days.

          The report must specify the amount due and the reasons for the delay in payment.

ஜே.எஸ்.டபிள்யு சந்தை மதிப்பில் முதலிடம்

மார் 26, 2025 12:03 AM

              மும்பை:பங்குச் சந்தையில் சந்தை மதிப்பு அடிப்படையில், முன்னணி நிறுவனங்களான ஆர்செலர் மிட்டல், நிப்பான் ஸ்டீல் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, உலகின் அதிக மதிப்புள்ள ஸ்டீல் நிறுவனமாக, ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல் மாறி உள்ளது.

           ஜே.எஸ்.டபிள்யு குழுமத்தின் அங்கமான, ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல், நிப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றுள்ளது.

           நடப்பாண்டு மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள், 18 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டுள்ளது. இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 2.59 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

நிறுவனம் சந்தை மதிப்பு (ரூ., லட்சம் கோடியில்)

ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல் 2.590

ஆர்செலர் மிட்டல் 2.093

நிப்பான் ஸ்டீல் 2.049.

JSW Tops Market Valuation in Steel Industry

March 26, 2025, 12:03 AM

           Mumbai: JSW Steel has emerged as the world’s most valuable steel company, surpassing industry giants ArcelorMittal and Nippon Steel in market valuation.

          A part of the JSW Group, JSW Steel has been included in the Nifty 50 index.

          This year alone, the company’s stock has risen by 18%, pushing its total market valuation to ₹2.59 lakh crore.

Market Valuation of Companies (₹ lakh crore):

  • JSW Steel – 2.590
  • ArcelorMittal – 2.093
  • Nippon Steel – 2.049.

ஸ்வீடன் உதிரிபாக நிறுவனத்தை கையகப்படுத்தும் டாடா குழுமம்.

மார் 25, 2025 07:18 AM

       புனே; டாடா குழுமத்தின் வாகன உதிரிபாக நிறுவனமான ‘டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ்’ ஸ்வீடனின் ஐ.ஏ.சி., என்ற ‘இன்டர்நேஷனல் ஆட்டோமோடிவ் காம்போனென்ட்ஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

        ஐ.ஏ.சி., நிறுவனம், வாகன உட்புற அமைப்புகள் மற்றும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 6,640 கோடி ரூபாய். கையகப்படுத்தப்படும் தொகை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது, ஐரோப்பிய ஒழுங்குமுறை அனுமதிக்கு உட்பட்டது.

        ஐ.ஏ.சி., நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, ஸ்வீடனில் மூன்று இடங்களில் அமைந்துள்ளது. ‘வோல்வோ கார்ஸ், வோல்வோ ட்ரக்ஸ், ஸ்கேனியா’ நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் உதிரிபாகங்களை வினியோகம் செய்து வருகிறது.

Tata Group Acquires Swedish Auto Parts Company

March 25, 2025, 07:18 AM

        Pune: Tata AutoComp Systems, the auto components division of the Tata Group, has announced the acquisition of Sweden-based International Automotive Components (IAC).

        IAC specializes in manufacturing vehicle interior components and spare parts, with an annual revenue of ₹6,640 crore. The financial details of the acquisition have not been disclosed, but the deal is subject to European regulatory approval.

        IAC has three manufacturing plants in Sweden and supplies components to major companies such as Volvo Cars, Volvo Trucks, and Scania.

5 சீன பொருட்கள் குவிவதை தடுக்க வரி விதிப்பு: உள்நாட்டு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை

 24 Mar, 2025 05:02 PM

        அண்டை நாடான சீனாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியை இந்தியா விதித்துள்ளது. உள்நாட்டு தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

         இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்குவம் பிளாஸ்க், அலுமினிய தாள், மின்னணு பாகங்களில் பயன்படுத்தப்படும் காந்தப்பொருட்கள், டிரைக்ளோரோ ஐசோசயனூரிக் அமிலம், பாலி வினைல் குளோரைடு பேஸ்ட் பிசின் ஆகிய 5 பொருட்கள் வழக்கமான விலைக்கும் குறைவாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், உள்ளூரில் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களால் சந்தையில் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது.

         இந்த நிலையில், உள்ளூர் தொழிலை பாதுகாக்கும் வகையில் இந்த சீன பொருட்களுக்கு பொருள் குவிப்பு எதிர்ப்பு வரி விதிக்கப்படுகிறது. ஐந்து வருட காலத்துக்கு இந்த வரிவிதிப்பு அமலில் இருக்கும்.

Anti-Dumping Duty on 5 Chinese Goods: Central Government’s Measure to Protect Domestic Industry.

March 24, 2025, 05:02 PM

       India has imposed an anti-dumping duty on five products imported at low prices from neighboring China. The central government has taken this step to protect domestic industries.

       According to a notification issued by the Central Board of Indirect Taxes and Customs (CBIC) under the Revenue Department, the following five products are being imported from China at prices lower than usual: vacuum flasks, aluminum sheets, magnetic materials used in electronic components, trichloroisocyanuric acid, and polyvinyl chloride (PVC) paste resin.

      Due to this, domestic manufacturers engaged in these industries are struggling to compete in the market. To safeguard local industries, the government has imposed an anti-dumping duty on these Chinese products. This duty will remain in effect for five years.

இறக்குமதியில் எந்த நாட்டு தயாரிப்பு என்பதற்கான ஆதாரம் கட்டாயம்.

 மார் 22, 2025 11:23 PM

         புதுடில்லி; தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் நன்மைகளை பெறுவதற்கு, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எந்த நாட்டை சேர்ந்தது என்பதை, ஆதாரத்துடன் குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

        மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், சுங்க விதிகள் (வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் சான்று விதிகள் நிர்வாகம்) 2020ல், பல்வேறு பொருட்களுக்கு சான்றிதழ் என்பதற்கு பதிலாக, ஆதாரத்துடன் கூடிய சான்றிதழ் என திருத்தி உள்ளது. இது மார்ச் 18 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

        இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். குறிப்பாக, சீனாவில் இருந்து மொபைல் போன், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவை வியட்நாம், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் வழியாக கொண்டு வந்து, போலியாக தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் நன்மைகளை பெற்று வருகின்றனர்.
        இதனால் ஏற்படும் அதிகபட்ச வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த இந்த திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

Proof of Country of Origin is Mandatory for Imports.

March 22, 2025 – 11:23 PM

        New Delhi: To ensure the benefits of free trade agreements (FTAs) are availed correctly, the central government has made it mandatory to provide proof of the country of origin for imported goods.

       The Central Board of Indirect Taxes and Customs (CBIC) has amended the Customs (Administration of Rules of Origin under Trade Agreements) Rules, 2020, replacing the term “certificate” with “certificate with supporting evidence” for various products. This amendment has come into effect from March 18, 2025.

Officials stated:
          The primary objective of this amendment is to tighten import regulations. In particular, mobile phones, electronic goods, and other products from China are being routed through Vietnam, Sri Lanka, and the UAE to falsely claim benefits under FTAs.

        To curb maximum tax evasion arising from such practices, this amendment has been implemented.

சிறுசேரி காக்னிசன்ட் வளாகத்தில் 14 ஏக்கரில் கற்றல் மையம்.

மார் 21, 2025 12:11 PM

       சென்னை:’காக்னிசன்ட்’ நிறுவனம், சென்னை சிறுசேரியில் உள்ள அதன் வளாகத்தில், 14 ஏக்கர் பரப்பளவில் கற்றல் மையத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

       அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அமைக்கப்படவுள்ள இந்த மையத்தில், ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பணியாளர்களுக்கு, நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

        கிட்டத்தட்ட 14,000 இருக்கைகளை கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த மையத்தில், ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்குபேட்டர் மையங்கள், வாடிக்கையாளர் அனுபவ இடங்கள், வடிவமைப்பு சிந்தனை மையங்கள், குடியிருப்பு மற்றும் நல்வாழ்வு வசதிகளும் வழங்கப்படும்.

        இந்த மையம், கோவை, ஹைதராபாத், புனே, கொச்சி ஆகிய நகரங்களில் அமைக்கப்படவுள்ள கற்றல் மையங்களுக்கு உறுதுணையாக செயல்படும். மேலும், தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, புதிய ஆராய்ச்சி மற்றும் கற்றல் திட்டங்களில் பங்கெடுத்து, தொழில்துறை முன்னேற்றத்துக்கு பங்களிக்கவும் உதவியாக இருக்கும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Cognizant to Establish a 14-Acre Learning Center at Siruseri Campus

March 21, 2025, 12:11 PM
    

     Chennai: Cognizant has announced its plan to set up a learning center spanning 14 acres at its Siruseri campus in Chennai.

       This center, set to be established over the next three years, will provide training in advanced artificial intelligence technologies to 100,000 employees annually.

         Designed to accommodate approximately 14,000 seats, the center will feature smart classrooms, incubator centers, customer experience zones, design thinking labs, residential facilities, and wellness amenities.

         Additionally, this center will support other learning centers being set up in cities such as Coimbatore, Hyderabad, Pune, and Kochi. It will also serve as a platform for collaboration among technology firms, academicians, customers, and the public, facilitating research and learning initiatives that contribute to industrial advancement. This was stated in the announcement.

2,325 நிறுவனங்கள் ரூ.25,000 கோடி முதலீடு

 மார் 19, 2025 11:26 PM

        சென்னை:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததில், தமிழகத்தில் இதுவரை, 2,325 நிறுவனங்கள், 25,003 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்களை துவக்கியுள்ளன.

        தமிழக அரசு, தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. இதன் வாயிலாக, பல துறைகளில் ஒட்டுமொத்தமாக, 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்க்க பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

           அதன்படி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 5,068 நிறுவனங்கள் வாயிலாக, 63,573 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதனால், 89,519 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,325 Companies Invest ₹25,000 Crore

March 19, 2025 – 11:26 PM

           Chennai: As part of the agreements signed with the Micro, Small, and Medium Enterprises (MSME) sector at the Global Investors Meet, a total of 2,325 companies have started operations in Tamil Nadu with an investment of ₹25,003 crore.

         To attract industrial investments, the Tamil Nadu government organized the Global Investors Meet in January 2024. Through this initiative, Memorandums of Understanding (MoUs) were signed with various companies, securing a total investment commitment of ₹6.64 lakh crore across multiple sectors.

        As per the agreement, the MSME sector alone has attracted investments worth ₹63,573 crore through 5,068 companies. This has resulted in the creation of 89,519 job opportunities, according to reports.

சென்னையில் கார் உற்பத்தி இல்லை இன்ஜின் மட்டுமே தயாரிக்க திட்டம்.

மார் 18, 2025 10:51 PM

         சென்னை மறைமலை நகரில் உள்ள ‘போர்டு’ நிறுவனத்தின் ஆலையில், இன்ஜின் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், உற்பத்தி துவங்க இருப்பதாகவும்; கார்கள் உற்பத்தி செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.

          அமெரிக்க அரசு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதிக இறக்குமதி வரி விதிப்பதால், இங்கு கார் உற்பத்தி திட்டத்தை இந்நிறுவனம் கைவிட்டதாக தெரிகிறது.

  2022க்கு பிறகு, போர்டின் குஜராத் ஆலையை டாடா நிறுவனம் கையகப்படுத்தினாலும், அங்கிருந்து இந்நிறுவனத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

     தற்போது சென்னை ஆலையில், இன்ஜின் மற்றும் அது தொடர்பான உற்பத்தி மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

         முன்னதாக, என்டேவர், எவரெஸ்ட் மற்றும் மஸ்டாங் ஆகிய மின்சார மாடல் கார்களை இங்கு உற்பத்தி செய்ய, இந்நிறுவனம் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

       நாடு முழுதும் இந்நிறுவன விற்பனை மையங்கள் மூடப்பட்டு, பராமரிப்பு நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அதனால், ஏற்றுமதிக்கான உற்பத்தியை மட்டுமே, இந்நிறுவனம் இங்கு மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

         கால் நுாற்றாண்டு காலமாக இந்திய சந்தையில் இருந்த போர்டு நிறுவனம், கடும் போட்டி, அதிக செலவு பிடிக்கும் கார் பராமரிப்பு, கார்களை மேம்படுத்தாதது, புதிய அறிமுகங்கள் இல்லாதது போன்ற காரணங்களால், விற்பனையில் கடும் சரிவை சந்தித்தது.

         இதையடுத்து செப்டம்பர் 2021ம் ஆண்டில், இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதாக தெரிவித்தது.  இந்தியாவில், இந்நிறுவனத்துக்கு 17,310 கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Car Production Halted in Chennai; Only Engine Manufacturing Planned.

March 18, 2025 – 10:51 PM

          It has been reported that the ‘Ford’ company’s plant in Maraimalai Nagar, Chennai, is planning to manufacture engines and export them overseas. Production is expected to begin in the second quarter of this year, and it has been confirmed that no cars will be manufactured.

          Due to high import taxes imposed by the U.S. government to encourage domestic manufacturing, the company seems to have abandoned its plan to produce cars in India.

          After 2022, Ford’s Gujarat plant was acquired by Tata Motors, but it continues to export essential spare parts needed for Ford’s operations.

         Currently, the Chennai plant is expected to focus only on engine and related component manufacturing.

         Earlier, Ford had explored the possibility of manufacturing electric models like Endeavour, Everest, and Mustang in Chennai. However, this plan has now been abandoned.

         Across the country, Ford’s sales outlets have been shut down, and only service centers remain operational. As a result, the company is now focusing solely on production for export.

        Ford, which had been in the Indian market for over a quarter of a century, faced significant challenges due to intense competition, high maintenance costs, lack of vehicle upgrades, and limited new model introductions, leading to a sharp decline in sales.

        Subsequently, in September 2021, the company announced that it would cease car production and sales in India. It has been reported that Ford incurred a loss of ₹17,310 crore in the Indian market.

ஸ்டீல் தரக்கட்டுப்பாடு விதிமுறைகள் சிறுதொழில் துறையினரை பாதிக்கும்

 மார் 14, 2025 11:48 PM

           புதுடில்லி:ஸ்டீலுக்கான புதிய தரக் கட்டுப்பாடு விதிமுறைகளால், ஆணி, நட், போல்ட் உள்ளிட்ட ஸ்டீல் உதிரி பாகங்களின் இறக்குமதி பாதிக்கப்படுவதோடு, இதன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சிறுதொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பு தெரிவித்துள்ளது.

          இதனால், வேலை இழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

         அதுமட்டுமல்லாமல், வாகனம், ஏரோஸ்பேஸ், மின்னணுவியல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

           ஏனென்றால், இத்துறைகளில் பயன்படுத்தப்படும் உயர்தர ஸ்டீல் பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை; இறக்குமதி செய்யப்படுகின்றன.

புதிய விதிமுறைகளின்படி, இதை ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

            இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனமும் இதற்கான அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் 20ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளதால், இவற்றின் இறக்குமதி தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

             கடந்தாண்டு மட்டும் 9,500 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டிலிருந்து ஆணி, நட், போல்ட் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டன. சீனாவிலிருந்து மட்டும் 2,660 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

Steel Quality Control Regulations Will Impact Small Businesses

March 14, 2025, 11:48 PM

          New Delhi: The new quality control regulations for steel are expected to not only affect the import of steel components such as bolts, nuts, and screws but also severely impact small businesses involved in their production, according to the G.D.R.I. (General Directorate of Industrial Research) organization. There is a risk of job losses due to these regulations.

           Furthermore, the production in sectors like automotive,  aerospace, electronics, and defense is also likely to be affected. This is because high-quality steel components used in these industries are not produced in India and are imported.

           Under the new regulations, foreign companies exporting these items must obtain permission from the Bureau of Indian Standards (BIS), which sets the Indian quality standards. It is noteworthy that neither foreign nor Indian companies have received this approval yet. With the new rules set to come into effect from the 20th of this month, there will be a situation where these imports will be restricted.

           Last year alone, steel components like bolts, nuts, and screws worth ₹9,500 crore were imported. Of this, ₹2,660 crore worth of imports came from China.

14-03-2025 10.30am

இலங்கை சந்தையில் புதிய கார்கள் டாடா மோட்டார்ஸ் அறிமுகம்

 மார் 10, 2025 11:48 PM

                      நம் அண்டை நாடான இலங்கையில், எலக்ட்ரிக் கார் உள்ளிட்ட புதிய கார் ரகங்களை டாடா மோட்டார்ஸ் மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. தன் அங்கீகரிக்கப்பட்ட டீலரான டிமோவுடன் இணைந்து, பஞ்ச், நெக்ஸான் மற்றும் கர்வ் கார் ரகங்களுடன், எலக்ட்ரிக் மாடலான டியாகோ காரையும் இலங்கையில் டாடா அறிமுகப்படுத்தி உள்ளது.

            இது குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச மின்சார கார்கள் வணிகப் பிரிவின் தலைவர் யாஷ் கண்டேல்வால், ”இலங்கையில் எங்களது சர்வதேச வணிக உத்தியின் புதிய அத்தியாயத்தை துவங்கி இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டு வரும் டாடா மோட்டார்ஸ், புதிய தயாரிப்புகளுடன் திரும்புவது சிறந்த ஒன்று,” என தெரிவித்துள்ளார்.

பேப்பர் மற்றும் பேப்பர் அட்டை இறக்குமதி 20 சதவீதம் உயர்வு

            நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், பேப்பர் மற்றும் பேப்பர் அட்டை இறக்குமதி 20 சதவீதம் உயர்ந்து, 17.60 லட்சம் டன்னாக அதிகரித்து இருப்பதாக இந்திய பேப்பர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், 11,196 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

    முதல் 9 மாதங்களில், 10,000 கோடி ரூபாய்க்கு மேல் பேப்பர் இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. இதே காலத்தில், பிற நாடுகளை விட, சீனாவில் இருந்து 36 சதவீதம் அளவுக்கு பேப்பர் இறக்குமதி அதிகரித்து உள்ளது.

Tata Motors Introduces New Cars in the Sri Lankan Market.

 
March 10, 2025, 11:48 PM
        In our neighboring country Sri Lanka, Tata Motors has reintroduced new car models, including electric cars. In collaboration with its authorized dealer, Timo, Tata has launched the Punch, Nexon, and Curvv car models, along with the electric version of the Tiago car in Sri Lanka.
        Regarding this, Yash Khandelwal, the Head of Tata Motors’ International Electric Vehicles Business, said, “We have started a new chapter of our international business operations in Sri Lanka. Tata Motors, which has seen significant changes over the past few years, is making a great return with new products.”
Paper and Paperboard Imports Rise by 20%
        In the current financial year, during the period from April to December, paper and paperboard imports have increased by 20%, reaching 1.76 million tonnes, according to the Indian Paper Manufacturers Association. The value of these imports has amounted to ₹11,196 crores.
        In the first 9 months, paper imports exceeding ₹10,000 crores mark the first occurrence of this. During this period, paper imports from China have risen by 36% compared to other countries.