
ரூ.515 கோடியில் கோத்ரெஜ் தொழிற்சாலை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
சென்னை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் குண்ணப்பட்டில், 27 ஏக்கரில் ‘கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்’ நிறுவனம், 515 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 3 ஆண்டுக்கு பின் 8.25 சதவீதமாக உயர்வு
புதுடில்லி:
நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, நிதி சூழலுக்கு ஏற்ப, புதுடில்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு மாற்றி அமைத்து வருகிறது.
கடந்த 2022 நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இது கடந்த 1978 நிதியாண்டுக்கான 8 சதவீத வட்டி விகிதத்துக்கு பின் மிக குறைவாகும். கடந்த நிதியாண்டில் இது 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டம், புதுடில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 2024ம் நிதியாண்டில், வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
மத்திய நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளில் வட்டித்தொகை வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Employees’ Provident Fund interest rate increases to 8.25% after 3 years.
New Delhi:
The interest rate for the Employees’ Provident Fund (EPF) for the current financial year has been increased to 8.25%, the highest in the last three years.
The interest rate for the Employees’ Provident Fund is periodically adjusted by the central board of trustees of the Employees’ Provident Fund Organization (EPFO) in New Delhi based on the financial situation.
For the 2022 financial year, the interest rate for the EPF was reduced to 8.10%, the lowest in the last 40 years. This was the lowest since the 8% interest rate set for the 1978 financial year. In the last financial year, the rate was raised to 8.15%.
In this context, a meeting of the central board of trustees of the EPFO was held in New Delhi yesterday. In this meeting, it was decided to raise the interest rate to 8.25% for the 2024 financial year.
Once approval is obtained from the Ministry of Finance, a government notification will be issued, and the interest amount will be credited to the accounts of the beneficiaries.
